ஜாதிவாரி கணக்கு: 'சமூக நீதி'யின் தாய்நிலத்தை முந்திய பீகார்- களமிறங்குமா திராவிட மாடல் திமுக அரசு?
சென்னை: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களையும் வெளியிட்டு சரித்திரம் படைத்துவிட்டது பீகார் மாநிலம். இந்தியாவில் சமூக நீதியின் தாய்நிலமான தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசும் பீகாரை பின்பற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இனியேனும் முன்வருமா? என்பது சமூக நீதியாளர்களின் எதிர்பார்ப்பு.
"வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஒரு தேசத்தின், ஆட்சியின் பொது உரிமையும், அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றி சமமாய் அடைய வேண்டியது என்பதுதான். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்பட்ட வகுப்பார்கள் என்று கருதப்பட்டவர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாமல் எப்படிச் சமத்துவம் ஏற்படும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு, மறுபடியும் உள் வகுப்புகள் ஏற்படுமே என்கிற பயமிருக்குமானால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டியதுதான்" (22.11.1925)

- இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி முழங்கியவர் தமிழ்நாட்டை ஆளும் இன்றைய திராவிட மாடல் திமுக அரசின் 'தந்தை' பெரியார்தான்.
தந்தை பெரியார் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியது ஆங்கிலேயர் ஆட்சியில். இத்தகைய குரல்களின் நியாயத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் 1931-ம் ஆண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டனர்.
1931-ம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: 1931-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களைத்தான் இன்று அதாவது நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் 'இடஒதுக்கீடு' நடைமுறைகளுக்கு அடிப்படை ஆதாரமாக பயன்படுத்துகிறோம். நாடு விடுதலைக்குப் பின்னர் இடஒதுக்கீடு கோரி தந்தை பெரியார் 1950களில் போராட்டங்களை முன்னெடுத்த காலம் தொடங்கி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை: தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகாலம் திராவிட அரசுகள்தான் ஆட்சி செய்கின்றன. ஆனாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1990களில் மண்டல் கமிஷன் மூலம் இடஒதுக்கீடு உரிமை முழக்கம் வீச்சடைந்தது. அப்போது முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாகவே 2011 அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான திமுகவும் இடம் பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்தது. நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டன.
கிடப்பில் போட்ட மத்திய பாஜக அரசு: ஆனால் 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களில் குழப்பம் இருப்பதாக கூறி அதனை நிராகரித்து வந்தது. இதனையே திரும்ப திரும்ப நீதிமன்றத்தில் கூறியும் வருகிறது.
சாதித்து காட்டிய பீகார் அரசு: இந்த நிலையில்தான் ஒரு மாநில அரசால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறது பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அக்குவேறு ஆணிவேறாக புள்ளி விவரங்களை வெளியிட்டுவிட்டது.
தமிழ்நாட்டை முந்திய பீகார்: தமிழ்நாட்டில் அண்மைகாலமாக இந்த கோரிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்டோரும் திராவிடர் இயக்கங்களும் வலியுறுத்தி வந்தன. ஆனாலும் சமூக நீதியின் தொட்டில் என்றும் சமூக நீதியின் தாய்நிலம் என்றும் பெருமிதம் பேசுகிற தமிழ்நாட்டை முந்திக் கொண்டுவிட்டது பீகார் மாநில அரசு!
சாதிக்குமா திராவிட மாடல் திமுக அரசு?: இப்போதும் காலம் போய்விடவில்லை. என்னதான் ஒரு மாநில அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது; அதிகாரம் இல்லை என வெற்றுக் கூச்சலை மத்திய பாஜக அரசு எழுப்பிக் கொண்டே இருந்தாலும் பீகாரை பின்பற்றி, பீகார் "இந்தியா" கூட்டணி அரசு சாதித்ததை பின்பற்றி அதே "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் "திராவிட மாடல்' அரசும் சரித்திரம் படைக்க முடியும். எத்தனையோ புரட்சிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்திய, இந்திய மண்ணில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பிரகடனம் செய்கிற துணிவு பெற்ற 'திராவிட மாடல்' அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்! புதிய வரலாறு படைக்க முடியும்!
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications