தமிழக வரலாற்றில் முதல் முறையாக.. இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்
சென்னை: தமிழக வரலாற்றில் முதல் முறையாகவும் இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்றைய தினம் தாக்கலாகிறது.
Recommended Video
இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் தனி பட்ஜெட்டில் இடம் பெறக் கூடிய அம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தி விவசாயச் சிக்கல்களுக்கு உரிய தீர்வும் ஈட்டப்படும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கவலைகளை தீர்க்கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என ஏற்கெனவே அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இதன் மூலம் நிச்சயம் வேளாண் துறை வளர்ச்சி பெறும் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே கர்நாடகாவில் முதல் முறையாக கடந்த 2011- 12 ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த 2013- 14 ஆம் ஆண்டு தனி வேளாண் பட்ஜெட் தாக்கலானது.
இரு மாநிலங்களும் விவசாயிகளின் பிரச்சினைகளில் தனி கவனம் செலுத்துவதற்காகவே தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அந்த வகையில் ஏராளமான விவசாயிகளை கொண்டுள்ள தமிழகமும் இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
தெலுங்கானா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தன. ஆனால் இதுநாள் வரை செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த வேளாண் பட்ஜெட்டால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கவும் புதிய வேளாண் திட்டங்களில் விவசாயிகளை ஈடுபடுத்துவதை அதிகரிக்கவும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications