40000 முகாம்.. 8 மணி நேரத்தில் 17 லட்சம் பேருக்கு வேக்சின் போட்டு தமிழக அரசு சாதனை.. எப்படி நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெறும் 8 மணி நேரத்தில் 17 லட்சம் பேருக்கு வேக்சின் போட்டு தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3,80,86,771 வேக்சின் டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் ஒரு டோஸ் வேக்சின் கூட வீணாக்காமல், இருக்கிற டோஸ்களை விட கூடுதலாக ஊசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. 3,02,67,242 பேர் இதுவரை தமிழ்நாட்டில் ஒரு டோஸ் வேக்சின் போட்டுகொண்டுள்ளனர்.
ஆனால் இன்னும் இரண்டாம் டோஸ் வேக்சின் அதிக நபர்களுக்கு போடப்படவில்லை. 78,19,529 பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுகொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று கொரோனா வேக்சின் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. மக்களுக்கு அதிக அளவில் வேக்சின் போடும் விதமாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

எத்தனை
இந்த சிறப்பு முகாமில் இன்று காலை 7 மணியில் இருந்து மாலை வரை மொத்தம் 8 மணி நேரத்தில் 17 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் போடப்பட்ட மிகப்பெரிய வேக்சின் டோஸ்கள் அளவு இதுதான். அதோடு தமிழ்நாட்டில் இன்னும் கூடுதலாக 3 மணி நேரம் வேக்சின் போடப்பட உள்ளது. இரவு 7 மணி வரை வேக்சின் போடப்பட உள்ளது. இதனால் இன்றைய நாள் முடிவதற்குள் இதைவிட இன்னும் அதிகமான நபர்களுக்கு வேக்சின் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டார்கெட்
தமிழ்நாட்டில் இன்று 20 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்படும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என்று மக்கள் தொகை அடிப்படையில் முகாம்கள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் முன்கூட்டியே வேக்சின் போடுவதற்காக மக்களிடம் டோக்கன் கொடுக்கப்பட்டு அவர்களின் வருகை உறுதி செய்யப்பட்டது.

எங்கே எல்லாம்?
பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பொது சுகாதார மையங்கள், நூலகங்கள் என்று மக்கள் எளிதாக வர கூடிய இடங்களில் முகாம்கள் வைக்கப்பட்டது. அதிக மக்கள் வர கூடிய நகரங்களில் மைதானங்களில் பந்தல் போடப்பட்டு முகாம்கள் உருவாக்கப்பட்டது. மக்கள் எல்லோரும் எளிதாக வரும் வகையிலும், உடனே வேக்சின் போட்டுகொண்டு செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முறையான திட்டமிடல் காரணமாக மக்கள் எளிதாக முகாம்களுக்கு வர முடிந்தது.

சரியான திட்டமிடல்
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி விஏஓ வரை எல்லோரும் திட்டமிட்டு முழுமையாக களமிறங்கி இந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். எல்லோருக்கும் என்னென்ன பணிகள் என்று முறையாக வகுக்கப்பட்டு எங்கும் சொதப்பாமல் இந்த பணிகளை செய்துள்ளனர். இதனால்தான் நினைத்ததை விட அதிக வேகமாக மாலை 4 மணிக்கு உள்ளாகவே 17 லட்சம் பேருக்கு வேக்சின் போட்டுள்ளனர். இதே வேகத்தில் சென்றால் இன்று இரவு 7 மணிக்குள் நினைத்த 20 லட்சத்தை விட அதிகமான நபர்களுக்கு வேக்சின் போடும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் இந்த முறையான திட்டமிடல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தேசிய அளவில் வேக்சின் மாடலாக உருவெடுத்துள்ளது.

மக்கள் ஆர்வம்
மக்கள் இன்று வேக்சின் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினார்கள். பலருக்கும் முதல் டோஸ் வேக்சின் போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கிராமங்கள், நகரங்கள் என்று வேறுபாடு காட்டாமல் பல இடங்களிலும் மக்கள் ஆர்வமாக வேக்சின் போட்டுக்கொண்டனர். பெரிய முகாம்களில் கோவாக்சின், கோவிஷீல்ட் போட்டுக்கொள்ள தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது, இன்னும் சில முகாம்களில் முதல் டோஸ் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள தனி தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

சென்னை 1600
சென்னையில் மட்டும் 1600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவையிலும் 1000க்கும் அதிகமான இடங்களில் முகாம்கள் வைக்கப்பட்டு இருந்தது. சென்னை தவிர்த்து மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கோவையில் வ.உ.சி மைதானத்தில் மிகப்பெரிய கேம்ப் நடத்தப்பட்டது. பல கிராமங்களில் வீடு வீடாக ஸ்லிப் கொடுக்கப்பட்டு வேக்சின் போடப்பட்டது. முன் கூட்டியே ஸ்லிப் கொடுக்கப்பட்டதால் மக்கள் வருவது உறுதி செய்யப்பட்டு வேக்சின் வீணடிப்பது தவிர்க்கப்பட்டது.

குலுக்கல்
பல மாவட்டங்களில் மக்களிடம் வேக்சின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய பரிசுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. காஞ்சிபுரத்தில் வேக்சின் போடும் நபர்களில் குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்கம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மதுரையில் குலுக்கல் முறையில் 5 பேருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் வெவ்வேறு மாவட்டங்களில் மக்களுக்கு பல பரிசுகள் அறிவிக்கப்பட்டதால், ஆர்வமாக பலர் வந்து வேக்சின் போட்டுவிட்டு சென்றனர்.

இனியும் பிளான்?
தமிழ்நாடு அரசு இனி வாரம் ஒருமுறை இப்படி பெரிய வேக்சின் முகாம் நடத்தும் திட்டத்தில் உள்ளது. சென்னையில் முதலில் இதேபோல் முகாம் நடத்தப்பட்டது. சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட முகாம் வெற்றிபெற்றது. இதையடுத்து அதை பின்பற்றி தற்போது தமிழ்நாடு முழுக்க முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஒரு நாள் என்று இல்லாமல் வாரம் ஒரு முறை செய்யும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது. இதற்கு ஏற்றபடி மத்திய அரசிடம் வேக்சின் வாங்கும் முடிவில் அரசு உள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இதற்கு என்று சிறப்பு முகாம்கள் நடத்தும் திட்டத்தில் அரசு உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications