தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான சில அப்டேட்களை கொடுத்துள்ளார்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது. நேற்று உருவான இந்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறும் தாழ்வு பகுதி டிசம்பர் 4ம் தேதி ஒடிசாவில் கோபால்பூர் அருகே கரையை கடக்கும். ஆனால் இதனால் தமிழ்நாட்டில் மழை பெய்யாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் அப்டேட்

முதல் அப்டேட்

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மிக முக்கியமான குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வானிலை குறித்து மூன்று அப்டேட்களை அவர் வெளியிட்டுள்ளார். அவர் செய்துள்ள முதல் ட்வீட்டில், சென்னைக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டிற்கும் தேவையான அந்த பிரேக் கிடைத்துவிட்டது. சூரிய ஒளியை இனி பார்க்க முடியும்.

இரண்டாவது அப்டேட்

இரண்டாவது அப்டேட்

அதேபோல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் இன்று வறண்ட வானிலையே காணப்படும். சில இடங்களில் இங்கும் அங்கும் லேசான மழை பெய்யும். ஆனால் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது ட்வீட்டில் கடலூர் - காரைக்கால் - வேதாரண்யம் பெல்டிலும், அருகில் உள்ள இடங்களிலும் இன்று மிக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது அப்டேட்

மூன்றாவது அப்டேட்

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள மூன்றாவது அப்டேட்டில், தற்போது வரக்கூடிய புயல் சின்னம் பற்றி கூறி உள்ளார். வர உள்ள புயல் தமிழ்நாட்டிற்கானது கிடையாது. இது அப்படியே மேலே சென்றுவிடும். நம்மிடம் வராது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புதிய புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நல்ல செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    அடித்து ஊற்றிய மழை… ஊர்ந்து சென்ற வாகனங்கள்… வாகன ஓட்டிகள் அவதி!
    பிரேக்

    பிரேக்

    இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 3 வாரமாக கனமழை பெய்து வந்தது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டிற்கு தேவையான பிரேக் கிடைக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+