அம்பத்தூர், பூந்தமல்லியை சுற்றி மழை மேகங்கள்.. சென்னை சிட்டிக்குள் நுழையாதது ஏன்?.. வெதர்மேன்
சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூர், பூந்தமல்லி, மாங்காடு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அசானி புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மசூலிப்பட்டினம்- நர்சாபூர் இடையே கரையை கடந்தது. இது கரையை கடக்கும் போதே வலுவிழந்திருந்தது.
கரையை கடந்தாலும் அது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறி வடதமிழகம், தென் ஆந்திராவுக்கு மழையை கொடுக்கும் என சொல்லப்பட்டது.

கத்திரி வெயில்
அதன்படி கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலால் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து குளிர்ச்சியை தந்தது. சென்னையில் அக்னி வெயிலால் 24 மணி நேரமும் ஏசி இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீர் மழை மக்களை குளிர்வித்தது.

வெயில்
இந்த நிலையில் நேற்று வெயில் வாட்டி வதைத்தது. இன்று சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு, அயப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகிறது.

பூந்தமல்லி
இதனிடையே பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பள்ளம் எது மேடு எது என தெரியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது இடி சப்தம் கேட்கிறது. சென்னை நகரில் இல்லாமல் புறநகர் பகுதிகளில் மட்டும் ஏன் மழை பெய்கிறது என்பது குறித்து பிரதீப் ஜான் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் அம்பத்தூர், பூந்தமல்லி, மாங்காடு பகுதிகளில் இருக்கும் மழை மேகங்கள் ஏன் நகருக்குள் நகரவில்லை.

அக்னி வெயில் குறைந்துள்ளது
ஒன்று சென்னை நகருக்கு அப்பால் நகரும் அல்லது பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலேயே இருக்கும். அங்கு தீவிரமடைந்து மழையை கொடுக்கும். அதிக மேகங்கள் சென்னை மாநகருக்குள் தள்ளப்படும். இன்னொரு நல்ல விஷயம் இன்று அக்னி வெயில் குறைந்துள்ளது. அம்பத்தூர் பகுதிகளில் 5ஆவது நாளாக இன்று மழை பெய்து வருகிறது என வெதர்மேன் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications