அடுத்த வாரம் வங்கக் கடலில் காற்றழுத்தம்.. புயலாக மாறுமா?.. வெதர்மேன் சொன்ன சூப்பர் அப்டேட்!
சென்னை: வங்கக் கடலில் அடுத்த வாரம் மேலடுக்கு சுழற்சி உருவாகி அது காற்றழுத்தமாக மாற வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முதல் நாளிலேயே தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1, நவம்பர் 2 ஆம் தேதி மிக கனமழை பெய்தது. அது போல் புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் மழையானது படிப்படியாக குறைந்தது. தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெயில் வந்துள்ளது.

திருவள்ளூர்
சென்னையை போல் திருவள்ளூரிலும் கனமழை பெய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேட்டி அளித்துள்ளார். இவர் கூறுகையில் முதல் மழையானது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நன்கு பெய்துள்ளது. இந்த மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகம் இருந்ததாக சொல்லலாம்.

வடசென்னை
அதிலும் குறிப்பாக வடசென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் சென்னையின் மழையின் அளவு 350 மி.மீ. ஆகும். ஆனால் தற்போது இந்த இரு நாட்களில் சென்னையின் வடசென்னையில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. கிட்டதட்ட 90 சதவீதத்தை அடைந்துவிட்டோம். இது ஒரு அற்புதமான தொடக்கம்.

மழையின் தாக்கம்
அது போல் தென் மாவட்டங்களில் விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழையின் தாக்கம் வடதமிழகத்தில் சற்று குறையும். வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதே சிட்ரங் புயல் வங்கதேசம் நோக்கி நகர்ந்துவிட்டது. தற்போது பெய்த மழை மேலடுக்கு சுழற்சியால் பெய்தது.

மன்னார் வளைகுடா
இது அப்படியே மன்னார் வளைகுடா வழியாக கடலுக்குள் சென்றுவிடும் என தெரிகிறது. வரும் 6, 7 ஆகிய தேதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகி , அது காற்றழுத்த பகுதியாக வங்கக் கடலில் உருவாக வாய்ப்பிருக்கிறது. அது அப்படியே 9 அல்லது 10 தேதி வரை இருக்கும். அது வலுவடைந்து புயலாக மாறுமா இல்லை காற்றழுத்தமாகவே இருக்குமா என்பதை உருவானவுடன் சொல்லலாம். வடகிழக்கு பருவமழை என்று வந்துவிட்டாலே ஒரு புயலானது வந்துவிடும். அது தமிழகத்திற்கா இல்லை ஆந்திரத்திற்கா என்பது போக போகத்தான் தெரியும் என்றார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications