அக்.31 இல் சென்னைக்கு தரமான சம்பவம் இருக்கு.. 2021 ரிட்டர்ன்ஸ்.. வெதர்மேன் போட்ட பரபரப்பு போஸ்ட்!
சென்னை: சென்னையில் நாளை மறுநாள் அல்லது நவம்பர் 1 ஆம் தேதி கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரளா, மகாராஷ்டிரா, கோவா, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 23 ஆம் தேதி விலகியது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவைக்கு பலனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த 23 ஆம் தேதி தாமதமாக விலகியதால் வடகிழக்கு பருவமழையும் தாமதமாக தொடங்குவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழைக்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவவில்லை.

காற்றின் ஈரப்பதம்
காற்றின் ஈரப்பதமும் குறைவாகவே இருந்தது. இதனாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. எனினும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையே மழையோடு இருக்கும் என சென்னைவாசிகள் கவலைக் கொண்டனர். ஆனால் சென்னை, வடதமிழக மக்கள் மகிழ்ச்சியாகவே பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பதிவில் மழை குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய கடலோர பகுதி, தென் கடலோர பகுதி, தென் தமிழகம் ஆகியவற்றில் இன்று மழை தொடங்கும். அது போல் வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 1 வாரம் வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

6 நாட்களில் ஒரு நாள்
சென்னையில் வரும் 31 ஆம் தேதி அல்லது நவம்பர் 1 ஆம் தேதி தரமான சம்பவம் நடைபெறும். மேலடுக்கு சுழற்சியால் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 6 நாட்களில் குறைந்தபட்சம் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ஒரு நாளாவது சிறந்த நாளாக அமையும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போல் இந்த ஆண்டும் மழை பெய்யும். இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications