சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அணிவகுக்கும் சிவப்பு தக்காளிகள்.. 22ஆம் தேதி வரை சென்னையில் மழை நீடிக்கும்.. வெதர்மேன்!

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் வரை வரும் 22 ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில் கூறுகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை சுற்றி நீண்ட காலத்திற்கு பிறகு சிவப்பு தக்காளிகள் அணிவகுத்து நிற்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பச்சலனத்தால் மழை பெய்தது.

இ-பதிவு முறையில் ஏதும் சந்தேகங்கள் இருக்கிறதா?.. '1100' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழையுங்கள்! இ-பதிவு முறையில் ஏதும் சந்தேகங்கள் இருக்கிறதா?.. '1100' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழையுங்கள்!

இரவு நேரங்களில் பூமி குளிர்ந்து கடற்கரையை காற்றை அதிகரிக்கும். நேற்று கள்ளக்குறிச்சியில் மழை இல்லை. திருச்சி பகுதியில் மழை பெய்தது.

சிவப்பு தக்காளிகள்

சிவப்பு தக்காளிகள்

வரும் 22ஆம் தேதி வரை அதாவது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் வரை சென்னையில் மழை பெய்யும். வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவானதும் தமிழகத்தில் மழை குறையும். நகரி முதல் செங்கல்பட்டு வரை சிவப்பு தக்காளிகள் உள்ளன.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இந்த பகுதிகளில் கருமேகங்கள் சூழந்தன. சென்னை புறநகர் பகுகிகளான குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் அரை மணி நேரத்திற்கு மழை பெய்தது. ஒட்டுமொத்த சென்னை நகரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

சென்னையில் மழை

சென்னையில் மழை

மே மாதத்தில் சென்னையில் மழை என்பது வரவேற்கத்தகுந்த விஷயமாகும். அதிலும் மே மாதம் மேற்கு காற்றால் சென்னையில் மழை என்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

புயல்

புயல்

வங்கக் கடலில் வரும் மே 24 ஆம் தேதி யாஸ் புயல் உருவாகிறது. இது ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கணித்துள்ளார்கள்.

English summary
Tamilnadu Weatherman says that Till 22nd Chennai has chance to get rains in this May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X