சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசானி புயல் எங்கே?.. சென்னைக்கு மேலும் இரு நாட்களுக்கு மழை.. வெதர்மேன் போட்ட குளு குளு போஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: அசானி புயல் எங்கே இருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்களை அளித்துள்ளார்.

Recommended Video

    #BREAKING அசானி புயல் எதிரொலியாக சென்னையில் விமான சேவை பாதிப்பு!

    தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் தீவுகள் அருகே அசானி புயல் உருவானது. இந்த புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இதன் திசை மாறுபாடு காரணமாக இது மீண்டும் கடலுக்குளே சென்றது. வடஇந்தியாவை நோக்கி இந்த புயலானது நகர்ந்தது. இது ஆந்திரா அருகே வலுவிழந்து கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

    அசானி புயல் வலுவிழந்தது...காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் - ஏற்பாடுகள் தயார் அசானி புயல் வலுவிழந்தது...காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் - ஏற்பாடுகள் தயார்

     அசானி புயல்

    அசானி புயல்

    இந்த அசானியின் காரணமாக ஆந்திராவில் சில மாவட்டங்களுக்கு அதிக மழையை கொடுக்கும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த புயல் இன்று கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

     அசானி எங்கே

    அசானி எங்கே

    அவர் கூறுகையில், மச்சிலிப்பட்டினத்தின் தென் பகுதியில் அசானி புயல் இருக்கிறது. இது ஆந்திர கடற்கரையின் மச்சிலிப்பட்டினத்தில் தென் பகுதியில் கரையை கடக்கும். இந்த அசானி மச்சிலிப்பட்டினத்தில் இருந்து வலுவிழக்கும். கரையை கடக்கும் போது காற்றானது மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் வீசும்.

    காற்று வீசும்

    காற்று வீசும்

    காற்று அதிகமாக வீசுவது மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமான மழையையும் கொடுக்கும். வலுவிழக்கும் அசானி புயலானது ஆந்திர கடற்கரையில் இருந்து கொண்டு நாளை அல்லது நாளை மறுநாள் மேலடுக்கு சுழற்சியாகும். இதன் மூலம் வடதமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும்.

     சென்னைக்கு மழை உண்டு

    சென்னைக்கு மழை உண்டு

    சென்னையில் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நல்ல மழை பெய்யும். வியாழக்கிழமையும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி அசானி புயலானது சென்னை மாநகருக்கு 30 முதல் 40 மி.மீ. மழையை கொடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman Pradeep John tweet about the land fall of the Asani Cyclone and its status.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X