தவெகவின் சின்னம் என்ன? தேர்தல் ஆணையம் கொடுக்கும் 190 ஆப்ஷன்கள்.. விஜய் தேர்வு செய்யப்போவது எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்தை தேர்வு செய்வது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவது தெரிய வந்துள்ளது. பொதுமக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்பதில் விஜய் முடிவுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி செயல்பட்டு வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினாலும், நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் என்று இதுவரை எந்த தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை.

Tamizhaga Vetri Kazhagam s Election Symbol What Will Vijay Choose for 2026 Tamil Nadu Elections

விஜய் பிறந்தநாள்

கட்சித் தொடங்கிய முதல் அறிக்கையிலேயே தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்தே தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அடுத்த மாதம் விஜய் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், அவரின் சுற்றுப்பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மேற்கு தொகுதி

அடுத்தக் கட்டமாக விஜய் பூத் கமிட்டி மாநாடு மற்றும் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று மதுரை மேற்கு தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தொண்டர்கள் போஸ்டர் அடித்திருந்தனர். இதுகுறித்து மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி, தவெக தொண்டர்கள் தங்களின் விருப்பத்தை மட்டுமே போஸ்டரில் கூறியுள்ளனர்.

தவெக நிர்வாகி விளக்கம்

தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முறையாக தலைமையால் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தவெக சின்னத்தை தேர்வு செய்யும் பணிகளில் விஜய் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தவெக சின்னம்

தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் தேர்வு செய்யும் வகையில் 190 சின்னங்கள் பட்டியலிட்டுள்ளது. தவெக புதிதாக தொடங்கப்பட்ட கட்சி என்பதால், அந்த கட்சி தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் தான் போட்டியிட முடியும். இதனால் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள சின்னத்தில் ஒன்றை தான் தவெக தேர்வு செய்ய முடியும்.

தேர்தல் ஆணையம்

நவம்பர் 9ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு மே மாதம் வரை சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரே சின்னத்திற்கு அதிகளவிலான விண்ணப்பங்கள் அளிக்கப்படும் போது, முதலில் விண்ணப்பிப்போருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் மற்றும் பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட விரும்பின.

சீமானுக்கு நடந்த சம்பவம்

ஆனால் பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் முன்னுரிமை மற்றும் தேசிய கட்சி பதிவு ஆகிய காரணங்களால் அளிக்கப்பட்டது. இதனால் தவெக தரப்பில் விரைவில் சின்னத்தை முடிவு செய்து முன்னதாக விண்ணப்பிக்க பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்களிடம் எளிதாக கொண்டு செல்லும் சின்னத்தை தேர்வு செய்வதில் விஜய் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+