மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு.. எல்லாமே மாறுது.. சாட்டையை சுழட்டிய மின்துறை..நிம்மதியில் தமிழகம்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக, தமிழக மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், இன்னொரு அதிரடியையும் அரசு முன்னெடுத்துள்ளது. இது தமிழக மக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
மின்தேவை அதிகரித்துள்ள போதிலும், கூடுமான வரையில், பாதிப்பு இல்லாமல், தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் செய்யப்பட தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.. இதற்கு காரணம், அதே அளவு மின் உற்பத்தியும் கொள்முதலும் இருந்ததால் பற்றாக்குறை பெரிதாக ஏற்படவில்லை.

ஊழியர்கள்: அதேபோல, மின்தடையும் பெரிதாக ஏற்படாமல், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.. இதற்காக மின்வாரிய ஊழியர்களுக்கு பிரத்யேக உத்தரவும், அறிவுறுத்தலும் பிறப்பிக்கப்பட்டே இருந்தது.
குறிப்பாக, மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும், நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் மின்வாரியம் அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது..
பருவமழை: காரணம், வழக்கமாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால், இந்த காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகப்படியான மழை பொழிவு இருக்கும். தவிர, பல காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி அவை வலுப்பெற்று புயலாகவும் மாறக்கூடும்.. இதுபோன்ற நேரத்தில், மின் பகிர்மான சாதனங்களில் பாதிப்புகளும் ஏற்படும்.
அதனால்தான், இதுபோன்ற, பாதிப்புகளை தவிர்க்கவும், மின் பகிர்மான கட்டுமானங்களை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து 12 மண்டல தலைமை பொறியாளர்கள், 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் சொன்னதாவது:
"வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பராமரிப்பு பணிகளின் நிலவரம், மின் கட்டணம் வாயிலாக வருவாயை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையின்போது மின்தடை ஏற்படுவதை தவிர்க்க மின் சாதனங்கள் முழுவதுமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மின்தடை: அடிக்கடி மின் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக பணியாளர்களை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் உள்ள மின் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்கு ஏற்ப, மின் கட்டணம் வசூலாகிறதா? என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது..
இதற்கு, மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகளில் மின் வினியோகத்தை துண்டிப்பதுடன், முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவதை தடுக்க தீவிர ஆய்வில் ஈடுபடுமாறும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார். அடிக்கடி மின்தடை வந்தால், "டிரான்ஸ்பர்" என்ற நடவடிக்கை பாயும் என்று மின்வாரியம் கண்டிப்புடன் கூறியுள்ளது, மிகுந்த கவனத்தை பெறுகிறது.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
இலவச மின்சாரத்துக்கு சிக்கல்? ரூ.20 ஆயிரம் கோடி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவது ஏன்? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications