கரண்ட் பில்..தொட்டா தூக்கிருவாங்க! ரீ-என்ட்ரி கொடுக்கும் ஃப்ராடு கும்பல்.. டான்ஜெட்கோவின் வார்னிங்..!
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்பு 'நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை உடனே செலுத்துங்கள் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என்று மெசேஜ் அனுப்பி வாடிக்கையாளர்களிடம் பணத்தை ஆட்டைய போட்ட வட மாநில கும்பலின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்து இருப்பதாகவும், எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.
பறவைகள் பலவிதம் என்பது போல மோசடிகளும் பலவிதம் என்பது போல் தான் இருக்கிறது ஆன்லைன் மோசடிகள். உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டு பேப்பரில் எழுதிக் கொடுத்து எடுத்த காலம் போய் தற்போது செல்போனிலேயே அனைத்தும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது

செல்போனிலேயே ஷாப்பிங் தொடங்கி மருத்துவ சிகிச்சை வரை அனைத்து வசதிகளும் வந்து விட்டதால் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
மோசடி சம்பவங்கள்: ’கார்டு மேலே இருக்க 16 நம்பர் சொல்லு சார்’ மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குள் அடுத்தடுத்த மோசடிகளை வட மாநில மோசடி கும்பல் மாற்றி வருகிறது. பார்சல் மோசடி, பென்சில் மோசடி தொடங்கி உச்சகட்டமாக ஐபிஎல் மோசடி வரை சென்று விட்டு நிலையில் தற்போது வரை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றி பணத்தை கறந்து வருகின்றனர். அப்படி ஒரு மோசடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.
மின் கட்டண மோசடி: தமிழக மட்டுமல்லாது நாடு முழுவதுமே அந்த மோசடி நடைபெற்றது. அதாவது தற்போது மின் கணக்கீடு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதிக்குள் அதனை செலுத்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்படி குறிப்பிட்ட தேதியில் நீங்கள் மின் கட்டணம் செலுத்தி இருந்தாலும்,"நீங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை.. உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.. அப்படி இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என மெசேஜ் அனுப்பப்படும். மேலும் இந்த லிங்கை கிளிக் செய்தால் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்தலாம் என மோசடியான ஆன்லைன் லிங்குகளை மோசடி பேர்வழிகள் அனுப்பினார்கள். அப்படி அந்த லிங்கை தொடும்போது வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணம் பறிபோனது.
மீண்டும் அதிகரிப்பு: தொடர்பாக ஏராளமான புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்தவர்களுக்கு மின் கட்டண மோசடி குறித்து மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்தனர். இதை அடுத்து சற்றே குறைந்திருந்த அந்த மோசடி தற்போது மீண்டும் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மின் வாடிக்கையாளர்களை குறி வைத்து தற்போது இந்த மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதனால் அவசரப்பட்டு அந்த லிங்கை தொடும்போது பணம் பறிபோகிறது.
மின்வாரியம் எச்சரிக்கை: இந்த நிலையில் தற்போது மின் கட்டண மோசடி அதிகரித்து வருவதாகவும் வாடிக்கையாளர்கள் இது போன்ற லிங்குகளை தொட வேண்டாம் என டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "மின் கட்டண மோசடி எஸ்எம்எஸ் மீண்டும் உலா வருகிறது. இதற்காக சிறந்த வழி எந்த லிங்கையும் கிளிக் செய்யாமலும் அந்த எண்ணுக்கு அழைக்காமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. ஒருவேளை மின்சார கட்டண நிலுவைத் தொகை குறித்து சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ வலைதளத்தை சென்று பார்க்க வேண்டும் எனவும், மோசடி தொடர்பாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என எச்சரித்துள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications