'என்ன.. டாஸ்மாக் 6 வருஷமா நஷ்டத்துல இயங்குதா?'.. அதிரடி மீம்ஸ்களால் தெறிக்க விடும் நெட்டிசன்கள்!
சென்னை: தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 'குடிமகன்'களை கையில் பிடிக்க முடியாது.
இந்த நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் பார்த்து, அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுக்கிறது டாஸ்மாக். இப்படி அரசுக்கு அட்சயபாத்திரமாக விளங்கும் டாஸ்மாக் கடைகள் நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீங்களா?

நம்பித்தாங்க ஆகணும்...
ஆனால் இதை நம்பித்தாங்க ஆகணும். தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. பழனியை சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2009-ம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை டாஸ்மாக் நஷ்டத்தொகை பற்றிய வருடாந்திர தகவலை கேட்டுள்ளார்.

நஷ்டத்தில் டாஸ்மாக்
இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு வாணிப கழகம், டாஸ்மாக் நிறுவனம் 2010-11 ஆண்டில் ரூ.3.56 கோடி, 2011-12 ஆண்டில் ரூ.1.25 கோடி, 2012-13 ஆண்டில் ரூ.103.64 கோடி, 2013-14 ஆண்டில் ரூ.64.44 கோடி, 2015-16 ஆண்டில் ரூ.67.61 கோடி, 2019-2020 ஆண்டில் ரூ.71.93 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், 6 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் மொத்தம் ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 2020-21 நிதியாண்டில் நிகழ்ந்த நஷ்ட கணக்கு கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் கிண்டல்
இந்த செய்தியை கேட்ட தமிழக மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதெல்லாம் நம்பும்படியாவா இருக்கிறது? என்று கூறும் நெட்டின்கள் டுவிட்டரில் தங்கள் அதிர்ச்சியை கொட்டி தீர்த்து விட்டனர். ''அடாது மழையிலும் விடாது தொழில் நடப்பது #டாஸ்மாக் மட்டும் தான். #Corona
தொற்று காலத்தில் கூட நீதிமன்றம் வரை சென்று டாஸ்மாக் திறக்க வாதாடியது அரசு.
அப்போ எப்படி நஷ்டம். oh... எலி குடிச்சிருச்சா?....'' என்று ஒரு நெட்டிசன்சன் கிண்டலாக கேட்டுள்ளார்.

''இதெல்லாம் வேஸ்ட்டா கோப்பால்?''
''கல்லீரலைக் கொடுத்துப் பொருளாதாரத்தைக் காக்கப் போராடுனதெல்லாம் வேஸ்ட்டா கோப்பால்?! #டாஸ்மாக் நஷ்டம்'' என்று ஒருவர் புலம்பியுள்ளார். ''டாஸ்மாக் ஊழியர்: மக்கள் குடிக்காம கஷ்டபட கூடாதுன்னு அரசாங்கம் கைக்காச போட்டு நடத்துறாங்க.. இவனுங்க என்னடான்ன பாட்டிலுக்கு மேல பத்து ரூவா தரமாட்டேன் அடம் பிடிக்கறாங்க.. சில்லி பீப்பிள் #TASMAC #டாஸ்மாக்'' என்று ஒரு நெட்டிசன் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

அரசுக்கு யோசனை
#டாஸ்மாக் சாராயக்கடைகளை தமிழக அரசு நடத்துவதால் 312 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனுதாரருக்கு பதில் அளித்திருக்கிறது #திமுக அரசு. சாராயக்கடைகளை முற்றிலும் ஒழித்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு உடனடியாக 312 கோடியும், நீண்டகால நோக்கில் பல லட்சம் மக்களின் உடல் நலனும் காக்கப்படும். எனவே திமுக அரசு உடனே முன் வந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாராயக்கடைகளையும் மூடி தமிழக மக்களுக்கு நிஜமான #விடியலை கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications