டாஸ்மாக் போட்ட கிடுக்கிப்பிடி.. சொல்லியும் கேக்கல.. வளையத்துள் மதுக்கடை மேலாளர்கள்? தமிழக அரசு மாஸ்
சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் தரப்பிலிருந்து மீண்டும் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன அது?
விரைவில் லோக்சபா தேர்தல் வருகிறது.. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.. அரசியல் கட்சிகள் படங்களின் போஸ்டர்கள், பேனர்கள், உடனடியாக அகற்றப்பட்டுள்ளன..

தலைவர்களின் உருவச்சிலைகளை துணிகளால் மறைக்கும் பணியும் நடந்து முடிந்துள்ளன. அதேபோல, பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லலாம்..
பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறவேண்டும்.. ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல, அரசு பஸ்களிலும் பார்சல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திடீர் கடிதம்: இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனமும் முக்கிய உத்தரவு ஒன்றினை 2 நாட்களுக்கு முன்பு பிறப்பித்திருந்தது.. இதுதொடர்பாக மதுக்கடை ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள்.
அதில், "மதுக்கடைகளில் 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்கக் கூடாது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 30 சதவீதத்திற்கு அதிகம் இருக்கக்கூடாது. மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது. தினமும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு ஆய்வு செய்யப்படும்.
மதுபானங்கள்: மதுக்கடைகளில் உள்ள, 21 பதிவேடுகளும் தினசரி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இருப்பு பதிவேடு கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். மதுக்கடைகளும், அதில் உள்ள மதுக்கூடங்களும் அரசு அனுமதித்த நேரமான மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டும் இயங்க வேண்டும். விற்கப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது தர வேண்டும்.
பிஓஎஸ் எனப்படும், விற்பனை முனைய கருவியில் விற்பதை அதிகப்படுத்த வேண்டும். மதுக்கடைகளில், டோக்கன் மற்றும், கூப்பன்களுக்கு கண்டிப்பாக விற்கக்கூடாது. கடை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும். காலாவதியான மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருத்தல் கூடாது" என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
மீண்டும் புகார்: இப்படி அதிரடி உத்தரவு பிறப்பித்தும்கூட, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டும்கூட, மதுக்கூடங்களில் முறைகேடாக மது விற்பனை நடக்கிறதாம்.. இந்த முறைகேடுகளை மாவட்ட மேலாளர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம்.. இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்துக்கு தொடர் புகார்கள் சென்றவண்ணம் இருந்தன.
எனவேதான், மீண்டும் ஒரு கிடுக்கிப்பிடி உத்தரவை டாஸ்மாக் பிறப்பித்திருக்கிறது.. அதன்படி, மதுக்கடைகள், மதுக்கூடங்களில் தவறுகள் கண்டறியப்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களே பொறுப்பாவார்கள்.. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது மீண்டும் இன்னொரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவறுகள் குறையும்: அனுமதியற்ற மதுக்கூடம் செயல்பட்டால், கடை மேற்பார்வையாளர் உடனே, மது விலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார், மாவட்ட மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு இருப்பதால், இனி இந்த தவறுகள் டாஸ்மாக்கில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், மதுக்கூடங்களில் மதுபானம் இருப்பது கண்டறியப்பட்டால், மதுக்கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் எச்சரித்திருப்பது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications