அந்த மனசு தான் சார் கடவுள்..கோடையை குளுமையாக்க ’டாஸ்மாக்’ மிகத் தீவிரம்! புது ஐட்டங்களை இறக்கி ஜில்!
சென்னை: கோடை காலம் துவங்கி இருக்கும் நிலையில் குடிகாரர்கள் ஹாட் மதுபானங்களை தவிர்த்து பீர் ஒயின் உள்ளிட்டவற்றை நாடி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே டாஸ்மாக்கில் 35 வகை பீர்கள் விற்கப்படும் நிலையில் தற்போது கர்நாடகா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விற்பனையாகும் ஆறு புதிய ரக பீர் வகைகளை டாஸ்மாக் களத்தில் இறங்கி உள்ளது. மேலும் 330 மில்லி டின் 650 மில்லி பாட்டில் வகைகளிலும் பீர் வந்துள்ளதால் குடிகாரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த நிலையில் தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் குடிகாரர்கள் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு ஒயின், பீர் ஆகியவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அதிக அளவில் கடைகளுக்கு பீர் வரத்து இருக்கிறது. கடந்த காலங்களில் தினமும் 60,000 பெட்டிகள் வரை தான் பீர் விற்கப்படும். ஆனால் தற்போது ஒரு லட்சம் பெட்டிகளை தாண்டி விற்பனையாவதால் தட்டுப்பாடு இன்றி பீர் பெட்டிகளை சப்ளை செய்ய வேண்டும் என மதுபான நிறுவனங்களுக்கு டாஸ்மாக் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய புதிய வகை பீர்களை குடிகாரர்கள் விரும்புவதால் டாஸ்மாக்கில் தற்போது விற்கப்படும் 35 வகை உயிர்களோடு மேலும் புதிய 6 பீர் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக தெலுங்கானா, கர்நாடகாவில் அதிகமாக விற்பனையாகும் பிளாக் பஸ்டர் பீர் கடந்த வாரம் டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பீரின் விற்பனை அதிக அளவில் இருக்கும் நிலையில் கர்நாடகாவில் தயாரிக்கப்படும் பிளாக் போர்ட், வுட்பெக்கர் லார்ஜர் ஆகிய பீர் ரகங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் ஃபிளையிங் மங்கி லெஜர், ஹண்டர் சூப்பர் ஸ்ட்ராங் ஆகிய இரு வகைகளும் டாஸ்மாக் மது கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 330 மில்லி டின், 650 மில்லி பாட்டில் ஆகியவற்றில் இந்த பீர் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே விற்பனையாகும் பீர்களை விட இந்த பீர்களுக்கு வரவேற்பு இருப்பதாக கூறுகின்றனர் டாஸ்மாக் சேல்ஸ்மேன்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications