என்னய்யா நாடு இது? 2 வார லாக்டவுன் எதிரொலி- ஒரே நாளில் ரூ426 கோடிக்கு மது விற்பனை-டாப் 1-ல் சென்னை!
சென்னை: கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் நாளை முதல் 2 வாரம் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
Recommended Video
மே மாதம் 2-வது, 3-வது வாரங்களில் கொரோனா அலை தாக்கம் உக்கிரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்தனர். இதனடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 10-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.

2 நாட்கள் திறப்பு
இந்த முழு லாக்டவுனை முழுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன் பொதுமக்கள் லாக்டவுனை எதிர்கொள்ளும் வகையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் முழு அளவில் இரவு 9 மணி வரை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
டாஸ்மாக் மதுபான கடைகள் சனி, ஞாயிறுகளில் மாலை 6 மணிவரை மட்டும் செயல்படும் என்றும் 2 வார லாக்டவுன் காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் நேற்றும் இன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்காமல் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

ரூ426 கோடிக்கு விற்பனை
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் ரூ426 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்படுவதால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகவே மூட்டை மூட்டையாக மதுபானங்களை பல்லாயிரம் ரூபாய்க்கு வாங்கி பதுக்கியவர்களும் இதில் ஏராளம்.

சென்னையில் ரூ100 கோடிக்கு விற்அனை
தமிழ்நாட்டில் சென்னை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ100 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன. மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடி, திருச்சி மண்டலத்தில் திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications