அரசு டாஸ்மாக்கில் சர்ப்ரைஸ்.. மதுக்கடைகளில் ரூ.100 கோடி கூடுதல் மதுபானம் நாளை விற்பனை? இப்பவே பிஸி
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமிழகம் மூழ்க துவங்கிவிட்டது.. அதேபோல மதுக்கடைகளில் கூட்டமும் நிரம்பி வழிகிறது.. இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் என்பதால் அதற்கு முன்பே மதுபானங்களை மொத்தமாக வாங்கி செல்ல குடிமகன்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் உச்சக்கட்ட குளிர் தமிழகத்தில் நிலவி வருவதால், குறிப்பிட்ட மதுபானங்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. ஒரு நாளுக்கு சராசரியாக ரூ.100 கோடி அளவிலான மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் இதன் விற்பனை ரூ.150 கோடி முதல் ரூ.170 கோடி வரை உயர்கிறது.

அரசு வருவாய்த் துறை
இதுவே பண்டிகை நாட்களில் விற்பனை இன்னும் அதிகரித்துவிடுகிறது.. குறிப்பாக கடந்த தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, டாஸ்மாக் துறை தமிழக அரசுக்கு முக்கிய வருவாய் ஈட்டும் துறையாகவே விளங்கி கொண்டிருக்கிறது..
மழை, வெள்ளம், புயல் அல்லது பண்டிகை காலங்களில் பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் பொதுவாக விடுமுறை விடப்படுவதில்லை.. இப்போது புது வருடம் பிறப்பிக்க போகிறது.. வரும் 2026ம் ஆண்டில் மொத்தம் 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு அறிவிக்கப்பட்டுள்ளது.. அது தொடர்பான லிஸ்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் விடுமுறை நாட்கள்
அதில் 2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாட்கள், ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 - குடியரசு தினம், பிப்ரவரி 1 - வடலூர் ராமலிங்கம் நினைவு தினம், ஏப்ரல் 31 - மகாவீர் ஜெயந்தி, மே 1 - தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், செப்டம்பர் 26 - மிலாது நபி, அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரப் போகும் 2026ம் ஆண்டில், மேற்கண்ட நாட்களில் விடுமுறை பட்டியல் அரசு அறிவிப்பு அடிப்படையில் கடைபிடிக்கப்படும் என்றே தெரிகிறது.
இதனிடையே, இன்றுடன் இந்த வருடம் முடிந்து, நாளை புத்தாண்டு என்பதால் டாஸ்மாக் கடைகள் படுபிஸியாக காணப்படுகின்றன.. காரணம், நாளை 1ம் தேதி அரசு விடுமுறையாகும்..
புத்தாண்டு மதுபானங்கள் - டாஸ்மாக் கடைகள்
புத்தாண்டு அதுவுமாக மதுபானங்களுடன் கொண்டாட முடியாத நிலைமை குடிமகன்களுக்கு ஏற்பட்டுள்ளது.. எனேவதான், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனைக்கு இப்போதே தயாராக உள்ளனவாம்..
அதிலும் அதிக விற்பனையுள்ள கடைகளில், ஒரு வாரத்திற்கு போதுமான அளவு சரக்கு கையிருப்பில் உள்ளது... சென்னை மற்றும் அதன் பரப்பளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல் பார்களில் மதுபான விற்பனை மிக அதிகமாக நடைபெறும் என்பதால், எல்லா வகையான மதுபானங்களும் கையிருப்பில் உள்ளன.
சென்னையில் மற்றும் அருகிலுள்ள புறநகரில் விற்பனை அதிகமாக இருப்பதால், எல்லா கடைகளிலும் குறைந்த அளவு மதுபானங்களும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன..
அதேபோல கடைகள் இரவு 10 மணிக்குள் மூடுவதால், அதற்கு முன்பே மக்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கிக்கொள்ள முனைந்துள்ளனர். தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற வகைகள் அதிகளவில் விற்பனை அடைய வாய்ப்பு உள்ளது.
ரூ.100 கோடி கூடுதல் விற்பனை?
மொத்தத்தில் புத்தாண்டு முன்னிட்டு விற்பனை மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.. பகல் 12 மணி முதல் இரவு வரை மதுக்கடைகள் கூட்டமாக இருக்கும். கடைகளில் போதுமான அளவு சரக்கு இருப்பதால், விற்பனை அதிகமாக இருந்தாலும் குறைவாகி விடும் என்ற பிரச்சனையும் இல்லை.
அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஒரு நாளில் மதுபான விற்பனை சுமார் ரூ.150 கோடி இருக்கும் என்றும், புத்தாண்டு நாளில் கூடுதலாக ரூ.100 கோடி மதுபானங்கள் விற்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications