சென்னை, கோவை, ஓசூர் நகரங்களில் வருகிறது "டெக் சிட்டிகள்.." உள்ளே என்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
சென்னை, கோவை, ஒசூரில் டெக் சிட்டிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, கோவை, ஒசூரில் டெக் சிட்டிகள் அமைக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டில் தகவல் தொழிலநுட்ப துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிகவும் முக்கியமான சில அறிவிப்புகளை இப்போது பார்ப்போம்.
மின்னணு முறையில் நேரடியாக எளிதான வெளிப்படையான முறையில் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கத்தை எய்த simple Gov என்ற புது முயற்சியை அரசு தொடங்கும்.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத்துறைகளின் நடைமுறைகளையும் சேவைகளையும் கணினிமயமாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன மென்பொருட்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய தரநிலைகளுடன் உருவாக்குவதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பில் மின்-ஆளுமை நிதி ஏற்படுத்தப்பபடும். இந்த நிதி அரசுத் துறைகளால் மேற்கொள்ளப்படும் மின் ஆளுகை முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும்.

கோவை சென்னை
உலகளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் "தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTch city)" இந்த அரசு அமைக்கும்.

புத்தொழில் நிறுவனங்கள்
தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (global capability centres), நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட,திறன்மிகு மையங்கள் புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்துக் கட்டமைப்புகளும் இந்தத் தொழில்நுட்ப நகரங்களில் ஏற்படுத்தப்படும்.

4000 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னையில் முதன்முறையாக 2000 ஆம் ஆணடில் tidel பூங்காக்களை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர். இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில் ஏழு மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நீட்சியாக ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 4000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நிதியமைச்சர் பிடிஆர்
இன்றைய இணைய உலகத்தில் தகவலே ஆற்றலுக்கும் அதிகாரத்திற்கும் அடித்தளம். இந்த அரசின் சமூக நீதி கொள்கையை நிலைநாட்ட, தகவல்களையும் வாய்ப்புகளையும் பரவலாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது அவசியமாகும். எனவே முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை,திருச்சி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்" இவ்வாறு நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தொழில்நுட்பம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications