Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசலில் எமனாக நின்ற மாமனாரை பார்த்து பூரித்த நிறைமாத கர்ப்பிணி.. யாருமே தெலுங்கானாவில் எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆணவ கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களாகவும் இருப்பதால், பெண் வீட்டாரே பெரும்பாலும் ஆணவக்கொலையில் ஈடுபட்டு விடுகிறார்கள்.. மாற்று சாதியினரை காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் அவமானமாக நினைத்து புழுங்குகிறார்கள். இதனாலேயே பெண்களும் சேர்த்து கொலை செய்யப்படுகிறார்கள்.. இதற்கு தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுமே விதிவிலக்கல்ல. இதோ தெலுங்கானாவில் நடந்துள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

தெலங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ளது கெர்ரே என்ற கிராமம்.. இங்கு சேகர் என்பவர் வசித்து வருகிறார்.. டிரைவர் வேலை பார்த்து வரும் சேகர், தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

Telangana Father in law

ராவணி பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராம்.. எனவே சேகரின் வீட்டில், இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.. ஆனாலும் ராவணியை உயிருக்கு உயிராக விரும்பிய சேகர், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2024 அக்டோபரில் ராவணியை திருமணம் செய்து கொண்டார்.

நிறைமாத கர்ப்பிணி

இது சேகரின் பெற்றோருக்கு கடுமையான ஆத்திரத்தையும் கோபத்தையும் தந்தது.. அவ்வளவு சொல்லியும், பழங்குடியினர் சமூக பெண்ணை தங்கள் மகன் திருமணம் செய்து கொண்டாரே என்று, குடும்பத்தினர் கொதிப்படைந்தனர்.. திருமண ஜோடியையும் வீட்டிற்குள் சேர்க்க மறுத்துவிட்டனர்.

ஆனால், ராவணியின் வீட்டில் மணமக்களை ஏற்று ஆசீர்வதித்தனர்.. இதனால், சேகர், ராவணியின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.. இப்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் ராவணி.. இப்போது முதலாம் வருடம் திருமண நாள், தலை தீபாவளி என்பதால், அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

காட்டுக்கு சென்ற கணவர்

இதற்காக சேகர் தன்னுடைய மாமியார், மாமனாருடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.. இதனை சேகரின் அப்பா சாத்தையா கவனித்துள்ளார்.,. அனைவருமே காட்டுக்குள் வந்துவிட்டதால், மருமகள் ராவணி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையும் தெரிந்து கொண்டு, அங்கு சென்றிருக்கிறார்.

திடீரென வாசலில் மாமனார் வந்து நிற்கவும், மனம் மாறி வந்திருப்பதாக நினைத்து ராவணி மகிழ்ச்சியில் துள்ளினார்.. நிறைமாத கர்ப்பிணி என்பதாலும், தலை தீபாவளி மற்றும் முதலாம் ஆண்டு திருமண நாள் என்பதாலும், வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக நினைத்து, வீட்டிற்குள் மாமனாரை வரவேற்று உபசரித்துள்ளார்..

கோடாரி மருமகள்

அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து மருமகளை வெட்ட பாய்ந்தார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராவணி, அங்கிருந்து ஓட முயற்சித்தார். அதற்குள் ராவணியின் கழுத்தின் பின் பகுதியில் கோடாரி வெட்டுப்பட்டது.

ரத்தம் வழிய வழிய, உடனே மாமனாரிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார்.. ஆனால், வெறி கொண்ட மாமனார், கர்ப்பிணி என்றும் பார்க்காமல் ராவணியை விரட்டி விரட்டிகோடாரியால் வெட்டினார்.. இதில் ரத்த வெள்ளத்தில் கர்ப்பிணி சரிந்து விழுந்தார்..

அதற்குள் இந்த தகவலறிந்து காட்டுக்குள்ளிருந்து கணவர் சேகர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.. அதற்குள் ராவணியின் உயிர் பிரிந்துவிட்டது..

கதறிய கிராம மக்கள்

நிறைமாத கர்ப்பிணியின் சடலத்தை கண்டு அந்த ஊர் மக்களே கதறி அழுதனர்.. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமனார் சாத்தையாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை, ஒரு வருடம் கழித்து வஞ்சம் தீர்த்த இந்த சம்பவம் தெலங்கானாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+