மட்டன் குழம்பில் வயாகரா கலந்து கணவனுக்கு தந்த மனைவி.. மெடிக்கல் ஷாப் ஓனருக்கு இது தேவையா? கொடுமை
சென்னை: கள்ளக்காதல்கள் கொடூரங்கள் பெருகி கொண்டே வருகின்றன. மனைவியை கணவன் கொலை செய்வதும், கணவனை மனைவி கொல்வதும் சகஜமாகி கொண்டு வருகிறது. உலகமறிய பச்சிளம் குழந்தைகளையும் கள்ளக்காதல்கள் காவு வாங்கி விடுகின்றன. இதுபோன்ற உறவு சிக்கல்கள், தகாத உறவுகளினால் ஏற்படும் வன்முறைகளில் சம்பந்தப்பட்ட தம்பதியினரின் குழந்தைகளின் எதிர்காலமே சீரழிந்து விடுகிறது. இதோ தெலுங்கானாவில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த பேரையும் வெலவெக்க செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது..சத்பகிரி பகுதியை சேர்ந்த டிரைவர் சுரேஷ்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் மவுனிகா.. 10 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நெருக்கம் - தகாத உறவு
தற்போது 30 வயதாகும் மவுனிகா, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.. அப்போதுதான் அஜய் என்ற இளைஞர் பழக்கமானார்.. இதற்கு பிறகு இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு தகாத உறவாக தொடர்ந்துள்ளது.இதனிடையே மவுனிகாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார் கணவர் சுரேஷ்.. அடிக்கடி துன்புறுத்தி பணம் கேட்கவும், இது மவுனிகாவுக்கு எரிச்சலை தந்தது.. ஒருகட்டத்தில் கணவரை கொன்றுவிடவும் முடிவு செய்தார்.
பாலியல் தொழிலாளிகள்
இதற்காக தன்னுடைய உறவினரும் பாலியல் தொழிலாளியுமான ஸ்ரீஜாவிடம் உதவி கேட்டுள்ளார்.. உடனே ஸ்ரீஜாவும், இன்னொரு பாலியல் தொழிலாளியான சந்தியா என்பவர் மூலம் சிவகிருஷ்ணா என்பவரை மவுனிகாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். சிவகிருஷ்ணா சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறாராம்.
இதையடுத்து அனைவரும் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய பிளான் போட்டனர். இறுதியில், சந்தியா, தேவதாஸ் என்பவர் மூலம் 15 வயாகரா மாத்திரைகளை வாங்கி வந்து சில நாட்களுக்கு முன்பு மவுனிகாவிடம் தந்திருக்கிறார்.
உடனே மவுனிகாவும், வீட்டில் மட்டன் குழம்பு வைத்து, அதில் வயாகரா மாத்திரைகளை கலந்துவிட்டார்.. பிறகு எதுவுமே தெரியாதது போல் சுரேஷூக்கு சாப்பாடு தந்து மட்டன் குழம்பி ஊற்றி தந்தள்ளார்.. ஆனால், மட்டன் குழம்பில் வித்தியாசமான வாசனை வரவும், மட்டன் குழம்பை சாப்பிடவில்லையாம். இது மவுனிகாவுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
தூக்க மாத்திரை பவுடர்
இதனால் அடுத்த கொலை முயற்சியில் மவுனிகா இறங்கினார்.. இதற்காக கடந்த மாதம் 17ம்தேதி இரவு BP மாத்திரை, தூக்க மாத்திரைகளை பவுடர் செய்து, மதுபானத்தில் கலந்து சுரேஷூக்கு தந்துள்ளார்.. அந்த மதுவை குடித்த சுரேஷ் சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்துவிட்டார்.. உடனே மவுனிகா தன்னுடைய புடவையால் சுரேஷை தூக்கு மாட்டி தொங்கவிட்டார்.. இதில் சுரேஷ் துடிதுடித்து இறந்துவிட்டார்.
பிறகு சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, சுரேஷின் அம்மாவுக்கு போன் செய்து ஒப்பாரி வைத்தார்.. தாங்கள் இருவரும் உல்லாச இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டார் என்று சொல்லி அழுதுள்ளார்.
அசிங்கப்பட்ட மவுனிகா
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுரேஷின் அம்மா, உடனடியாக சுரேஷை மீட்டு அருகிலிருந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால், சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து கரீம்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போதுதான், மவுனிகாவின் கள்ளக்காதல் அம்பலமானது. கிடுக்கிப்பிடி விசாரணையின் முடிவில் கள்ளக்காதலன் மெடிக்கல் ஷாப் ஓனர், பாலியல் தொழிலாளிகள் என மொத்த பேரும் சிக்கினார்கள். இறுதியில், மவுனிகா, கள்ளக்காதலன் அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications