அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000.. கோவில்களில் மொட்டை போட கட்டணம் கிடையாது: அமைச்சர் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழக திருக்கோவில்களில், மொட்டை போட்டுக் கொள்ளும் பக்தர்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
இந்து அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றபோது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் பல அறிவிப்புகள் பக்தர்களுக்கும், அர்ச்சககர்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

அர்ச்சகர்கள் மாத ஊக்கத் தொகை
இதோ அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை
அறநிலையத் துறை பராமரிப்பிலுள்ள திருக்கோவில்களில் இனி பக்தர்கள் முடி இறக்கி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்ற இந்த நடைமுறை நாளை செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும்.

வடலூர் சர்வதேச மய்யம்
அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மய்யம் வடலூரில் அமைக்கப்படும். இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி செலவில் தொடங்கப்படும்.

கட்டணம் கிடையாது
தமிழர் திருநாளாம் தை திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்சகர்களுக்கு புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் கிடையாது.

திருமண மண்டபம்
கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபதிற்கான பராமரிப்பு கட்டணம் மட்டும்தான், வசூலிக்கப்படும். திருக்கோயில்களை பாதுகாப்பதற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications