சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயில்களின் வரவு செலவு கணக்கு! அதிகாரிகளுக்கு குமரகுருபரன் போட்ட புது ஆர்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையில் முறைகேடுகள் தெரிந்தால், .தவறுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Indhu Aranilaya Thurai கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடு | Oneindia Tamil

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையர் ராஜாமணி அப்பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் அறநிலையத்துறை ஆணையராக கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார்.

    குமரகுருபரன் பதவியேற்ற முதல் நாளே இதுவரை இல்லாத புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார்.

    அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில், கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வர ஐந்து அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

    பதவியேற்ற முதல்நாளே குமரகுருபரன் அதிரடி உத்தரவு.. கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில் வருது! பதவியேற்ற முதல்நாளே குமரகுருபரன் அதிரடி உத்தரவு.. கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில் வருது!

    ஐந்து அம்ச திட்டம்

    ஐந்து அம்ச திட்டம்

    அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில், கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வர ஐந்து அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

    புதிய உத்தரவு

    புதிய உத்தரவு

    அதன்படி, கோயில்களின் நிதி நிலை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து அலுவலர்களுக்கும் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    பட்ஜெட் விவரங்கள்

    பட்ஜெட் விவரங்கள்

    அதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கோயில்களின் சொத்து விவரங்கள், புனரமைப்பு பணிகள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வையில் படும்படி இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட பிரிவு 86ன்படி, அறங்காவலர்கள் குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதிக்குள் பட்ஜெட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

    சட்டப்படி நடவடிக்கை

    சட்டப்படி நடவடிக்கை

    அதன் பின்னர் கோயில்களிள் நிதி நிலை விவரங்களை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கையில் முறைகேடு நடப்பது கண்டறியப்பட்டால், விதிகளை மீறும் அறங்காவலர் மீது சட்டப்பிரிவு 53ன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்கு துணை போன செயல் அலுவலர்கள் மீது தமிழ்நாடு சிவில் சர்வீஸ் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

    English summary
    govt has been decided to publish the financial statements of the temples under the control of the Department of Hindu Religious Affairs on the website every year. Hindu Charities Commissioner Kumarakuruparan has warned that action will be taken against the officials who are found guilty of irregularities in the financial statements.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X