"நெருப்பு" வைத்துள்ளோம்.. போராட்டம் பற்றி எரியும்.. ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பொங்கிய தா.வெள்ளையன்
ஜிஎஸ்டி வரியை கண்டித்து வணிகர் சங்கங்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தின
சென்னை: தமிழக மக்களுக்கிடையே போராட்ட உணர்வு பற்றி எரியத்தான் போகிறது... நாங்கள் இப்போது அதற்கான தீயை பற்றவைத்து இருக்கிறோம்.. ஜிஎஸ்டி கவுன்சிலின் வரி உயர்வு மத்திய, மாநில அரசு திட்டமிட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்பட்டதுடன், ஜூலை 18ம் தேதி முதல் அவைகள் அமலுக்கு வருமென கடந்த ஜூன் மாதமே ஜிஎஸ்டி கவுன்சில் செய்தி வெளியிட்டது.
விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் இப்போது 5 சதவீதமாக ஜிஎஸ்டி விதித்து ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன.
இதையடுத்து, அரிசி, கோதுமை, தயிர், லஸ்ஸி போன்ற பொருட்களின் விலை உயர்ந்தது... அரிசிக்கு ஜிஎஸ்டியா? என்று கேட்டு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலைகள்,கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது..

உறிஞ்சாதே.. ரத்தத்தை உறிஞ்சாதே
அதேபோல, பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.. அந்த வகையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலின் வரி உயர்வை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, உறிஞ்சாதே உறிஞ்சாதே.. ரத்தத்தை உறிஞ்சாதே.. ஜிஎஸ்டி வரியை முழுமையாக கைவிடு போன்ற பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஜிஎஸ்டி வரி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், அந்நிய தயாரிப்புகளை நாம் ஆதரிக்கவே கூடாது.. அரிசி, பால், பருப்பு, தயிர் இப்படி எல்லாவற்றிற்கும் வரி விதித்தால், அது கொடுமையான அரசு செய்யக்கூடிய காரியம்.. வீட்டுவரி, மின்கட்டண உயர்வு இதையெல்லாம் எதிர்க்க வேண்டும்.. அதில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.. இந்த ஜிஎஸ்டி வரி என்பது தேவையற்ற வரி.. யாருக்கு அதில் லாபமில்லை.. நாட்டு மக்களைதான் கொள்ளையடிக்கிறாங்க..

பால் - பருப்பு
அரிசி, பால், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை, மத்திய, மாநில அரசு உயர்த்திவிட்டு திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்... இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் வலியுறுத்தினாலும், ஆட்சியாளர்கள் தேர்தல் நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என்று தான் நினைப்பார்கள்.. தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றிவிடுகிறார்கள்..

மூடநம்பிக்கை
வணிகர் சங்கங்களின் கோரிக்கை வெற்றி பெறும் வரையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.. அடுத்தகட்ட போராட்டம் தீவிரமாக இருக்கவேண்டும்.. தமிழக மக்களுக்கிடையே போராட்ட உணர்வு பற்றி எரியத்தான் போகிறது... நாங்கள் இப்போது அந்த உணர்வு தீயை பற்றவைத்து இருக்கிறோம்.. அரசியல் கட்சிகள் மக்களை வஞ்சிக்கிற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் அந்த கட்சியில் இருந்து வெளியே வரவேண்டும்... மக்கள் அரசியல் மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வரவேண்டும்.. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தமுறையும், வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அந்நிய ஆதிக்கம்
வணிகத்தில் அந்நிய ஆதிக்கத்தை நாம் முறியடிக்க வேண்டும். எனவே, வருகிற ஆகஸ்ட் 8 ம்தேதி அந்நிய ஆதிக்கத்தை நாம் முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மகாத்மா காந்தி வழியில், 80 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தொடங்குகிறோம்" என்றார்.. முன்னதாக கடந்த மாதம், இதே கோரிக்கையை முன்னிறுத்தி, இதே வள்ளுவர் கோட்டத்தில், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விக்கிரமராஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 1000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications