சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் : சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் - எங்கிருந்து எங்குவரை தெரியுமா?

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் திருநாள் ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகைத் தொடங்கி ஜனவரி 16 காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும். 3 நாட்கள் விடுமுறையை சொந்த ஊரில் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் ரயிலில் செல்லவே பெரும்பாலோனோர் விரும்புவார்கள். இந்த நிலையில் சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லவும் சொந்த ஊரில் இருந்து சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அட.. இப்படியாகிபோச்சே.. பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் கிடையாது.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணைஅட.. இப்படியாகிபோச்சே.. பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் கிடையாது.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

ஜனவரி 12

ஜனவரி 12

வண்டி எண் 06001 தாம்பரம் - நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 12 ஆம் தேதி புதன்கிழமை இரவு 09.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 நெல்லை - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 13ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 09.30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

ஜனவரி 13 சிறப்பு ரயில்

ஜனவரி 13 சிறப்பு ரயில்

வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜனவரி13ம் வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

ஜனவரி 16

ஜனவரி 16

வண்டி எண் 06004 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 03.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

ஜனவரி 17 சிறப்பு ரயில்

ஜனவரி 17 சிறப்பு ரயில்

வண்டி எண் 06040 நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து ஜனவரி16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்று மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06039 தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் ஜனவரி17ம் தேதி காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
The Southern Railway has announced four special trains from Chennai to Nellai and Nagercoil districts for the convenience of passengers ahead of the Thai Pongal festival. It has been announced that special trains will run from January 12 to January 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X