Vijay Jana Nayagan: "ஒரு பெயரே வரலாறு.." விஜய்யின் ஜனநாயகன் 2வது சிங்கிள் வெளியானது.. தெறிக்கவிடும் ரசிகர்கள்
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளது. இதற்கிடையே இந்த படத்தின் 2வது சிங்கிள் இப்போது ரிலீஸாகியுள்ளது. ஒரு பெயரே வரலாறு என்று தொடங்கும் இந்தப் பாடலை விஜய் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் நுழைந்துள்ள விஜய், கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்குத் திரைக்கு வரவுள்ளது. படம் ரிலீசாக ஒரு மாதமே இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் வேலைகளை இப்போது படக்குழு ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியான நிலையில், 2வது சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு பெயரே வரலாறு என்று தொடங்கும் இந்தப் பாடல் இன்று மாலை 6.30க்கு வெளியானது. விஜய் ரசிகர்கள் இந்தப் பாடலை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பாடலரியிர் விவேக் எழுதியுள்ளார்.
ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இம்மாதக் கடைசியில் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications