தமிழக தேர்தல் ஆணையத்தை நாளை மதியம் முற்றுகை! தமிமுன் அன்சாரி ட்வீட்
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவது தொடர்ந்து கொண்டே இருந்தால் நாளை மதியம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடுவோம் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மதியம் முதல் அதே நிலைதானா? இந்திய தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிடுவதில் சூழ்ச்சி செய்கிறதா?

வாக்குகள் எண்ணப்டுகிறதா? ஏமாற்றப்படுகிறதா? அறிவிப்பு இனியும் தாமதமானால் நாளை மதியம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் முற்றுகையிடுவோம். இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் 543 தொகுதிகளில் சூரத் தொகுதியில் போட்டியின்றி வேட்பாளர் அமித்ஷா தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் மீதமுள்ள 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் அப்டேட் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏன் தேர்தல் முடிவுகள் வேகமாக அப்டேட் செய்யப்படவில்லை, கடந்த சில மணி நேரமாக ஏன் இந்த செயல்முறை மெதுவாக உள்ளது, வேகத்தை குறைக்க உத்தரவு எங்கிருந்து வந்தது?
உத்தரப்பிரதேசம், பீகாரில் உள்ள பல தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் ஏன் இத்தனை தாமதம், இது முற்றிலும் அசாதாரணமானது என தெரிவித்திருந்தார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications