டிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் கட்சி தலைவர் போல் செயல்படாமல் பயங்கரவாதிகள் தலைவர் போல் செயல்படுகிறார் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையேயான பனிப்போர் நேற்று முன் தினம் முதல் தீவிரமானது. இந்த நிலையில் நேற்றைய தினம் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். இதுகுறித்து தங்கதமிழ்ச் செல்வன் தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

பெரிதுப்படுத்திய ஊடகங்கள்
அந்த பேட்டியில் தங்கதமிழ்ச் செல்வன் கூறுகையில் கட்சி வேலைகளை பார்க்காமல் தினகரன் பொய் பேசி வருகிறார். நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின. எஸ்பி வேலுமணி, தங்கமணியுடன் நான் பேசுவதே இல்லை.

தீவிரவாத கும்பல்
கூவத்தூர், புதுவை, கர்நாடகத்தில் எங்களை அடைத்து வைத்தது ஏன்?
ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை கூறி மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்? ஸ்லீப்பர் செல்கள் என்ற வார்த்தையை தீவிரவாதிகள்தான் பயன்படுத்துவர்.

கவிழ்க்க
எனவே தினகரன் கட்சித் தலைவர் போல் இல்லாமல் ஏதோ தீவிரவாத கும்பலின் தலைவர் போல் செயல்படுகிறார். ஸ்லீப்பர் செல்கள் இருந்தால் ஆட்சியை கவிழ்க்க வேண்டியதுதானே.

தோல்வி
18 எம்எல்ஏக்களும் பதவியை இழந்து குடும்பத்தினர் வேதனையில் இருக்கிறார்கள். கட்சியை மீட்கவில்லை, சின்னத்தை மீட்கவில்லை, தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது. தேர்தலுக்கு பின்னர் தோல்வி குறித்து டிடிவி தினகரனிடம் பேசினேன். அதுமட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேசியிருந்தேன் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications