தஞ்சை களிமேடு தேர் விபத்தில் 12 பேர் பலி...சட்டசபையில் இரங்கல் - உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை: தஞ்சை களிமேடு தேர் திருவிழா விபத்தில் இறந்தோருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
Recommended Video
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நேற்று 94வது அப்பர் குருபூஜையை முன்னிட்டு நேற்று இரவு சப்பரம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.அப்போது பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை களிமேடு தேர் திருவிழா விபத்தில் இறந்தோருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
முதல்வர் சட்டசபையில் பேசிய போது, தஞ்சை களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
விபத்தில் 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுளேன். களிமேடு தேர்த் திருவிழா விபத்து தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன் எனவும் கூறினார்.
இந்த நிலையில் தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் தஞ்சை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். அத்துடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிக்கவும் உள்ளார்.












Click it and Unblock the Notifications