ராஜேஸ்வரி பிரியா நறுக்.. ஸ்கூல்ல செக்யூரிட்டி எங்கே? தஞ்சை டீச்சருக்கு கொடுமை.. இதான் திராவிட மாடலா
சென்னை: "அரசு சார்ந்த இடங்களுக்கு பாதுகாப்பு இல்லை.. யார் வேண்டுமானாலும் உள்ளே ஆயுதத்துடன் செல்லலாம் என்ற எண்ணத்தை கொடுத்திருப்பது அரசு நிர்வாகத்தின் அவலம் என்றும், கொலையாளிகளுக்கு கொலையை அரங்கேற்றுவதற்கான இடமாக அரசு நிறுவனங்கள் மாறி இருப்பதுதான் திராவிட மாடலா?" என்றும், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பாடசாலையில் ஆசிரியையாக ரமணி (26) என்ற இளம்பெண் 4 மாதங்களுக்கு முன்பு பணிக்கு சேர்ந்துள்ளார்.. சம்பவத்தன்று, ஆசிரியை ரமணி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். அப்போது சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன் என்ற 28 வயது நபர், ரமணியை வெளியே அழைத்து பேசியுள்ளார்.

பிறகு திடீரென, ரமணியை கத்தியால் மதன் குத்தியுள்ளார். தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து போலீசுக்கும் தகவல் தந்துள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியை ரமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
மதன் ஆத்திரம்: இதுகுறித்த போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், ரமணியும், மதனும் காதலித்து வந்ததாக தெரியவந்தது.. நேற்று முன்தினம், ரமணியை பெண் கேட்டு, அவரது வீட்டிற்கு மதனின் பெற்றோர் சென்றிருக்கிறார்கள். ஆனால், தங்களது மகளை மதனுக்கு திருமணம் செய்து தருவதில் விருப்பமில்லை என்று பெண்ணின் அப்பா சொல்லிவிட்டாராம்.
இந்த ஆத்திரத்தில்தான் ரமணியை கொன்றதாக தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், அதிமுக ஆதரவாளரும், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவருமானமான ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது சம்பந்தமாக ராஜேஸ்வரி பிரியா கண்டன அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
அரசு பள்ளி ஆசிரியை: தஞ்சாவூரில் ஆசிரியை வெட்டி படுகொலை செய்யபட்ட சம்பவம் பேரதிர்ச்சியை அளிக்கின்றது. சட்ட ஒழுங்கு சரியில்லை என்று நாங்கள் கூறும்போதெல்லாம் "எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி" என்று வசனம் பேசிய முதல்வரால் இறந்த ஆசிரியை உயிரை மீட்டுத் தர முடியுமா?
மருத்துவமனை கத்தி குத்து சம்பவம் நடந்தேறி ஒரு வாரம் கூட ஆகவில்லை.. அதற்குள் அரசு பள்ளிக்குள் பாடம் நடத்தி கொண்டிருந்த பெண் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசின் நிர்வாகத் திறன் அகல பாதாளத்தில் இருப்பதனை உணர்த்துகிறது.
நிறுவனங்கள்: அரசு சார்ந்த இடங்களுக்கு பாதுகாப்பு இல்லை யார் வேண்டுமானாலும் உள்ளே ஆயுதத்துடன் செல்லலாம் என்ற எண்ணத்தை கொடுத்திருப்பது அரசு நிர்வாகத்தின் அவலம் ஆகும். கொலையாளிகளுக்கு கொலையை அரங்கேற்றுவதற்கான இடமாக அரசு நிறுவனங்கள் மாறி இருப்பதுதான் திராவிட மாடலா?
பள்ளிக்கு வெளியில் பாதுகாவலர் ஏன் நியமிக்கப்படவில்லை? ஆசிரியரே நியமிக்க முடியாத உங்களால் எப்படி பாதுகாவலர் நியமிக்க முடியும்? இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதனை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் கொலை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
கால தாமதம்: தனிப்பட்ட பிரச்சினையினால் நடந்த சம்பவம் என்று நழுவி பதில் சொல்லாமல், குற்றம் செய்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விரைவில் கிடைக்க வழி செய்யுங்கள். இவன்தான் குற்றவாளி என வெட்ட வெளிச்சமாக தெரிந்த பிறகும் கால தாமதம் செய்து குற்றவாளியை தப்பிக்க வைத்துவிடாதீர்கள்" என்று ராஜேஸ்வரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications