பட்டுக்கோட்டைக்கு வரப்பிரசாதம்.. ராஜா சொன்னதுமே குஷியில் துள்ளும் தஞ்சாவூர்.. ஹப்பாடா இனிமே நிம்மதி
சென்னை: திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன ஹேப்பி நியூஸை கேட்டு, தஞ்சை மாவட்டமே மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளது. என்ன காரணம்?
இந்தியாவில் உற்பத்தியாகும் மின் வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.

அப்போது, "ஆட்டோ மொபைல் உற்பத்தி மற்றும் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக மின் வாகனங்களின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு தகவல்படி இருசக்கர வாகனங்களில் 70 சதவீதம் தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது இந்தியாவில் விற்பனையாகும் மின் வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை என்ற தகவல் கிடைத்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
அதிக சம்பளம்: கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்வாகன தயாரிப்பு நடைபெறுகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது வேலை வாய்ப்புகள் இன்னும் அதிகளவில் தமிழகத்துக்கு வரும். குறிப்பாக அதிக சம்பளம் பெறக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இப்போது பல்வேறு தொழில் நிறுவனங்களும் சென்னை மற்றும் கிருஷ்ணகிரியைச் சுற்றியே உள்ளன.
திருச்சி மற்றும் கோவையைச் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளும் மிகப்பெரியவளர்ச்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. புதிதாக 3 வளர்ச்சித் திட்டங்கள் வர உள்ளன. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்" என்று கூறியிருந்தார். அந்தவகையில், சென்னை + கோவை + திருச்சி என 3 மாவட்டங்களுக்கும் குட்நியூஸ் சொல்லியிருந்தார்.
மகிழ்ச்சி செய்தி: இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு பேட்டியை தந்துள்ளார்.. தஞ்சையில் இன்று டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:
பட்டுக்கோட்டையில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். என்னுடைய கோரிக்கையும் அதுதான். தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். இதற்காக நில தேவைகள் அதிகமாக உள்ளது. நில எடுப்பு நடந்து முடிந்த பிறகு விரைவிலே தென்னை சார் தொழிற்சாலை அமைக்கப்படும்.
வேளாண் தொழிற்சாலை: தஞ்சையில் ஐ.டி பார்க் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஐ.டி பார்க் செயல்பாட்டுக்கு வந்ததும் டெல்டா மாவட்டங்களில் படித்த ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications