எக்சிட் போல் 2021: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவிற்கு வெற்றி?.. கொண்டாட உயிருடன் இல்லையே!
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மறைந்த மாதவராவ் வெற்றி பெற வாய்ப்பு என தந்தி டிவி கருத்து கணிப்புகள் கூறுவதை பார்த்தால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றே தெரிகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதி. இந்த தொகுதி 1957 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டு கர்மவீரர் காமராஜ் திமுகவின் பி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக என மாறி மாறி வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு முறை 1989 ஆம் ஆண்டு வென்றது. இந்த முறை விருதுநகர் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

உடல்நலக் குறைவு
இவர் வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த நாளே உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனினும் அவர் இரு தினங்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வேட்பாளர்
பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாதவராவின் மகள் திவ்யா தனது தந்தைக்காக தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவரே மாதவராவிற்கு பதிலாக வேட்பாளராக மாற்றப்படுவார் என பரவலாக பேசப்பட்டது.

இரு முறை மாரடைப்பு
இந்த நிலையில் மாதவராவிற்கு இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி காலமானார். காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளை வகித்தவர். இவர் தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவர் என்பதால் இவர் நிச்சயம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக
இந்த நிலையில் தந்தி டிவி கருத்துக் கணிப்புகள் தொகுதி வாரியாக நேற்று வெளியானது. இதில் விருதுநகர் தொகுதியில் மறைந்த மாதவராவ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பாண்டுரங்கனை தோற்கடித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்
ஒரு வேளை கருத்து கணிப்புகளின்படி மாதவ ராவ் வென்றால் விருதுநகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்பட்டால் வசந்தகுமாரின் மகனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது போல் மாதவராவின் மகள் திவ்யாவிற்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைத்தேர்தல் வந்தாலும் விருதுநகரில் காங்கிரஸே போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications