Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது கோவில் குளமே இல்லங்க.. நங்கநல்லூரில் துடி துடிக்க பலியான 5 அர்ச்சகர்கள்.. கமிஷ்னர் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நங்கநல்லூரில் அர்ச்சகர்கள் குளித்த குளம் கோவில் குளம் கிடையாது, இது பஞ்சாயத்து குளம் என்று தகவல் வந்து உள்ளது, எதன் அடிப்படையில் கோவில் பக்தர்கள் இங்கே வந்தார்கள், என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

நங்கநல்லூரில் இருக்கும் தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயிலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்து இருக்கிறது.

அப்போது தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில் குளத்திற்குள் அர்ச்சகர்கள் இறங்கி சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

எத்தனை பேர் பலி

எத்தனை பேர் பலி

ஆழமான நீர் பகுதியில் அவர்கள் பூஜை செய்து கொண்டு இருந்தனர். கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது திடீரென சேற்றில் மூழ்கி சூர்யா (வயது-22) பலியானார். அவரை காப்பாற்ற சென்ற பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22) யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இவர்கள் 5 பேரும் ஒரே குளத்தில் எப்படி பலியானார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. முதலில் ஒரு அர்ச்சகர்தான் தண்ணீரில் மூழ்கி இருக்கிறார். அவரை காப்பாற்ற போய் மேலும் 4 பேர் தண்ணீரில் சிக்கிய நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

விசாரணை

விசாரணை

பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை பலியானவர்களில் எல்லோரின் உடலும் மீட்கப்பட்டுவிட்டது. அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின் இவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

 என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்த நிலையில் சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று உடனே பார்வையிட்டார் . அங்கே தீவிர சோதனைகளை அவர் நடத்தினார். அங்கே இவர் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், இங்கே மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ரிப்போர்ட் வந்தபின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினர் ஒப்படைக்கப்படும். கோவில் நிர்வாகம் சார்பாக யார் குளத்தில் இறங்கும் முடிவை எடுத்தது என்று விசாரிக்கப்படும். இது கோவில் குளம் கிடையாது.

பஞ்சாயத்து குளம்

பஞ்சாயத்து குளம்

இது பஞ்சாயத்து குளம் என்று தகவல் வந்து உள்ளது. எதன் அடிப்படையில் கோவில் பக்தர்கள் இங்கே வந்தார்கள். எதன் அடிப்படையில் அவர்கள் குளத்தில் இறங்கினார்கள். பக்தர்கள் எப்படி சரியாக இங்கே வந்தனர் என்றும் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் 18 வயது சிறுவர்களும் இங்கே வந்து குளத்தில் குதித்து உள்ளனர். அதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. இங்கே முறையாக விதிகளை பின்பற்றினார்களா என்று விசாரித்து வருகிறோம். இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+