இதுதான் சிறப்பான நேரம்.. கண்ணை மூடிட்டு தங்கம் வாங்குங்க.. இந்த 4 காரணங்கள் ரொம்ப முக்கியம்
சென்னை: சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த வாரத்திற்கான தங்கம் விலை கணிப்பு: அடுத்த வாரத்திற்கான தங்கம் விலை கணிப்பில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நாளை கணிக்கப்பட்டுள்ள தங்கத்தின் விலை ரூ. 1 கிராம் 24 காரட் தங்கத்திற்கு 7395 ஆக உள்ளது. அதாவது 0.027% குறையும்.

நாளை ரூ. 1 கிராம் 24-கோரட் தங்கத்தின் விலை 7021 ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உலகளாவிய போர் மற்றும் பொருளாதார பதட்டங்கள், தங்கத்தின் தேவை மற்றும் விற்பனை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளால் தங்க விலை வரும் வாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். நாளை தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்தாலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும்.
தங்கத்தில் முதலீடு செய்ய 4 முக்கிய காரணங்கள்: தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பின்வரும் 4 முக்கிய காரணங்கள் உள்ளன.
1. இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.
2. 2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார்.
4. சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. வடகொரியா - தென் கொரியா போர் , உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - ஈரான் போர் போன்ற போர்கள் தற்போது நடக்கின்றன. பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலதும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்: கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 2.10% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் தங்கம் 3.50% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.844.6 ஆக உள்ளது. இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 20 அன்று 10 கிராமுக்கு ரூ.73,303 ஆக உள்ளது. கிராம் ஒன்றின் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,341 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,900 ஆக இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் மத்திய வங்கியின் அதிக அளவிலான தங்க கொள்முதல், பணவீக்க அழுத்தங்கள், அதிகரித்த சில்லறை தேவை, பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் மூலம் அதிகரித்த வட்டி, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கு பங்களித்துள்ளன.
இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும். அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும். தங்கத்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இதன் மூலம் 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் 86 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை எட்டலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிப்பது அல்லது முழுமையான ஆராய்ச்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
-
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications