காரில் 110 கிமீ வேகம்.. சன்ரூப்பை ஓபன் செய்ய வைத்து குழந்தைகளை எட்டி பார்க்க வைத்து ஆபத்தான பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிவேகமாக காரை ஓட்டிக்கொண்டு சன்ரூப்பை ஓபன் செய்ய வைத்து குழந்தைகளை எட்டி பார்க்க வைத்துக் கொண்டு ஒருவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 100 முதல் 110 கிலோ மீட்டர் அந்த காரை ஓட்டி சென்றதாக ட்விட்டர்வாசி ஒருவர் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கார்களில் பயணிக்கும் போது சாலைகளில் கவனமாக செல்ல வேண்டும். சிலர் கார்களை ஏதோ ரேஸில் போவது போல் ஓட்டுகிறார்கள்.. அப்படி போகும் போது ஆபத்தில் முடிகிறது. யாராவது இருசக்கர வாகனத்தில் வந்தால் அவர்களை சிறிதாக தட்டிவிட்டாலும் பெரிய சிக்கல் ஆகிவிடும்.. இதேபோல் சாலைகளில் அதிவேகமாக செல்லும் போது, திடீரென யாராவது சாலையை கடக்கும் போது பெரிய விபத்து ஏற்படுகிறது. இதேபோல் சாலை சந்திப்புகளில் திடீரென பிரேக் பிடித்து வாகனங்கள் நிற்கும் போதும், கார் ஓட்டுநர்கள் நிலை தடுமாறி அந்த வாகனங்கள் மீது மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் சாலைகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் சம்பவமும் நடக்கிறது.

The car driver drove at high speed with the sunroof open and the children standing

அண்மையில் அசுர வேகத்தில் வந்த கார் மோதி, சென்னை அண்ணாநகரில் இரண்டு பேர் இறந்து போனார்கள்.. 6 பேர் படுகாயம் அடைந்தனர். கார் ஓட்டியவர் மது போதை மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. இது ஒரு புறம் எனில் அண்மையில் சென்னை திருவான்மியூரில் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலே இறந்து போனார். இதெல்லாம் சிறிய உதாரணங்கள். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்கும் போது பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.

அதிவேகமாக காரை ஓட்டிக்கொண்டு சன்ரூப்பை ஓபன் செய்ய வைத்து குழந்தைகளை எட்டி பார்க்க வைத்துக் கொண்டு ஒருவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "இது மிகவும் ஆபத்தான செயல், இவர் 100-110 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறார், இப்படி பிள்ளைகளை sunroof வழியாக மேலே எட்டி பார்க்க வைத்துக் கொண்டு செல்கிறார். அதிவேகத்தில் இப்படி அவர் சென்றது ஆபத்தானது. ஏனெனில் அந்த சாலை சில கி.மீ தூரத்திற்கு டிவைடர்கள் இல்லாத 2 லேன் ரோடு ஆகும்.. கிட்ட சென்று சைகை காட்டிய பின்னும் அவர் கண்டுகொள்ளவில்லை" என்று தெரிவித்தார். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+