சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப் பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்,

இந்த ஆலோசனையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் பின்வருமாறு:-

 சுற்றிவளைத்த தாலிபான்கள்.. வெறும் 2 நிமிடமே இருந்தது: அன்று என்ன நடந்தது? மனம் திறக்கும் அஸ்ரப் கானி சுற்றிவளைத்த தாலிபான்கள்.. வெறும் 2 நிமிடமே இருந்தது: அன்று என்ன நடந்தது? மனம் திறக்கும் அஸ்ரப் கானி

 8- வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை

8- வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை


* சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற
பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது
நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

* மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி
பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை,

* அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு
வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை
விதிக்கப்படுகிறது.

* 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி
வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள்
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி
செயல்படும்.

 புத்தகக் கண்காட்சிகள் ஒத்தி வைப்பு

புத்தகக் கண்காட்சிகள் ஒத்தி வைப்பு

* அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள்
நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள்
உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,

* வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது
நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து
கடைபிடிக்கப்படும்.

* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள்
மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும்
அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

 திருமண நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு

திருமண நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு

* பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/
Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட
அனுமதிக்கப்படுகிறது.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம்
100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல்
அனுமதிக்கப்படும்.

 அரசு, தனியார் பேருந்து

அரசு, தனியார் பேருந்து

* துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில்
50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை
உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள்,
விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50%
வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள்
ஒரு நேரத்தில் 50%வாடிக்கையாளர்களுடன் செயல்பட
அனுமதிக்கப்படும்.

* மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும். அரசு, தனியார் பேருந்துகளில் இருக்கைக்கு மிகாமல் பயணிகள் பயணம் செய்ய அனுமதி இல்லை.

English summary
Chief Minister MK Stalin has ordered that the curfew be extended till January 10 as the corona infection is spreading rapidly in Tamil Nadu. New restrictions have been announced
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X