சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்று தொடக்கம்.. கடற்கரை- செங்கல்பட்டு-தாம்பரம் நேர அட்டவணை
சென்னை: சென்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஏசி மின்சார ரயில் ஏப்ரல் 19ம் தேதியான இன்று முதல் ஓடப்போகிறது. சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே முதல் ஏசி மின்சார ரயில் சேவை காலை 7மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளில் மூன்று சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து ஏசி மின்சார ரயில்சேவை இயங்க போகிறது. இந்த ரயில் கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும்.
சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், ஏசி மின்சார ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த ஏசி மின்சார ரயில்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஓட்டத்திற்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் ஏசி மின்சார ரயில் இன்று (ஏப்ரல் 19ம் தேதி) முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரண்டு ரயில் சேவைகளும். தாம்பரத்திகு ஒரு ரயில் சேவைகளும் ஏசி விரைவு ரயில்கள் வழங்க உள்ளன. அதேஅளவில் மறுமார்க்கமாக ரயில்கள் ஓட உள்ளன.

சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை நேர அட்டவணை விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன் படி, சென்னை கடற்கரைக்கு ஏப்ரல் 19ம் தேதியான நாளை முதல் காலை 7மணிக்கு ஏசி மின்சார ரயில் புறப்படுகிறது. அதன்பிறகு கோட்டை, பூங்கா, எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் ஏசி ரயில். அடுத்ததாக மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர் ரயில் நிலையங்களில் நின்று செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு காலை 8.35 மணிக்கு சென்றுவிடும்.
பரனூருக்கு இந்த ரயில் வெறும் 8.17க்கு எல்லாம் சென்றுவிடும் என்பதால் வெறும் ஒரு மணி நேரத்திலேயே சென்னை செங்கல்பட்டு இடையே கிட்டத்தட்ட சென்றுவிடும் அளவிற்கு ஏசிமின்சார ரயில் வேகமாக சென்றுவிடும். வேலைக்கு செல்வோருக்கு இந்த ரயில் பயனுள்ளதாகஇருக்க போகிறது.

அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து 9 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், பரனூர், சிங்க பெருமாள் கோவில், பொத்தேரி,கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், திரிசூலம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர், பூங்கா, கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று காலை 10.30க்கு கடற்கரைக்கு வந்துவிடும். சென்னை புறநகர் பகுதியில் இருந்து புறப்பட்டு கிண்டி, தாம்பரம் பகுதியில் வேலை செய்யும் பலருக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.

அதேபோல் பிற்பகல் 3.45க்கு கடற்கரையில் இருந்து புறப்படும் ஏசி ரயில் முக்கிய ரயில் நிலையில் மட்டும் நின்று, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மாலை 5.25க்கு வந்து சேருகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45க்கு புறப்படும் ஏசி மின்சார ரயில் இரவு 7.15க்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.
அதேபோல் மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35க்கு புறப்படும் ரயில், வழக்கமான எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று இரவு 8.30க்கு தாம்பரத்தை அடையும். அத்துடன் ரயில் நிறுத்தி வைக்கப்படும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து காலை 5.45க்கு புறப்பட்டு 6.45க்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.இந்த ரயில் சென்னை கடற்கரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த ஏசி மின்சார ரயிலில் சிசிடிவி உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications