ஹஜ் புனிதப் பயணம்! ஆன்லைனில் ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! கால அவகாசம் தந்த ஹஜ் கமிட்டி!
சென்னை: ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோர் வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கால நீட்டிப்பு வழங்கியுள்ளது இந்திய ஹஜ் கமிட்டி.
இது தொடர்பாக தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;

''இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 15.01.2024 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 15.01.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 31.01.2025 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)ஐ தொடர்பு கொள்ளலாம்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி படைத்த இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் உலகெங்கும் வாழும் முஸ்லீம்கள் கோடிக்கணக்கில் மக்கா நகரில் குவிவார்கள். அந்த வகையில் தமிழகத்திலிருந்தும் ஆண்டுதோறும் 4,000க்கும் மேற்பட்டோர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுக்காக தான் ஹஜ் கமிட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications