அமெரிக்காவுடன் பகை, தமிழகத்தில் மொசாட் நடமாட்டம், யாசர் அராபாத் வார்னிங்! ராஜீவ் காந்தி சீரிசில் கட்
சென்னை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தன் அரசியல் வாழ்வில் நாட்டு நலனையும், உலக அரங்கில் இந்தியாவின் சுதந்திரமான அடையாளத்தையும் காப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரது இறுதி நாட்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளின் சிக்கலான கலவையாகவே இருந்தது. The Hunt - The Rajiv Gandhi Assassination Case என்ற வெப் சீரிஸ் வெளியாகியுள்ள நிலையில், விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாகவும், பிறகு சிவராசன் உள்ளிட்டோரை எப்படி சிறப்பு புலனாய்வு படை தேடிச் சென்றது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பான வாத விவாதங்கள் எழுந்துள்ளன.
ராஜீவ் காந்தி மரணத்திற்கு முன்பும், பின்பும் பல முக்கிய சம்பவங்கள் நடந்தேறின. அது குறித்து இந்த சீரிஸ் பதிவு செய்யவில்லை. இது ஒரு மோசமான சீரிஸ் என்று தமிழ் தேசியவாதி பாரிசாலன் ஒரு பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார். சீரிஸ் பதிவு செய்யாத விஷயங்கள் என்ன என்பதுகுறித்தும் தெரிவித்துள்ளார். அதுகுறித்த ஒரு ரவுண்ட்அப் இதோ..

அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள்: ராஜீவ் காந்தியின் எதிர்ப்பு!
1991 ஆம் ஆண்டு, குவைத் போர் உச்சத்தில் இருந்த நேரம். அப்போதைய இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகர், தலைமையிலான அரசு ஒரு சர்ச்சைக்குரிய முடிவை எடுத்தது. அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்திய விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்தது. இந்த முடிவு இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி, இந்த முடிவை மிகக் கடுமையாக எதிர்த்தார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முதுகெலும்பான 'தன்னாட்சி' மற்றும் 'நடுநிலை' ஆகியவற்றை நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இந்தியா எந்தவொரு உலகப் போர் கூட்டணிக்கும் ஆதரவளிக்கக் கூடாது என்பதில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தார். தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க போர் விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறிவந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி, அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக எச்சரித்தது. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட சந்திரசேகர் அரசு, அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் அனுமதியை உடனடியாக ரத்து செய்தது.
1991-ல் தமிழ்நாட்டில் 'மெசாட்'? சி.பி.ஐ. தகவல்கள்!
ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு நடந்த விசாரணைகள், பல சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளின் தொடர்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. சி.பி.ஐ. மற்றும் சிறப்பு விசாரணைக் குழு (SIT) நடத்திய ஆய்வுகளில், 1980கள் முதலே இஸ்ரேலின் உளவு அமைப்பான மெசாட், இலங்கை ராணுவம் மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தகவல்கள் கிடைத்தன.
சில தமிழ் இயக்கங்களுக்கு, இந்திய அமைப்புகள் வழியாக மொசாட் பயிற்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) அமைப்புக்கும் மொசாட்டுக்கும் நேரடித் தொடர்பு இருந்ததற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மொசாட் செயல்பட்டதாக சில தகவல்கள் இருந்தாலும், அவை அதிகாரப்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. சி.பி.ஐ. விசாரணையில் எல்.டி.டி.இ.-யின் பங்கு உறுதி செய்யப்பட்டதாக கூறியிருந்தாலும், சர்வதேச அமைப்புகளின் பங்கு குறித்து முழுமையான, வெளிப்படையான ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், விடுதலை புலிகள் அமைப்பு, ராஜீவ் காந்தியை கொன்றதாக தெரிவிக்கவில்லை. மாவீரர் நாளிலும் தற்கொலைப்படையினரை அவர்கள் கவுரவித்தது இல்லை. வழக்கமாக வேறு எங்கு இதுபோல தாக்குதல் நடத்தியிருந்தாலும் விடுதலை புலிகள் ஒப்புக்கொள்வதோடு மாவீரர் தினத்தில் அதை நினைவுகூர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்திக்கு ஆபத்து: யாசர் அரஃபாத்தின் நேரடி எச்சரிக்கை!
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரஃபாத், ராஜீவ் காந்தி குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி தீவிரமாக இருந்தபோது, அரஃபாத் அவருக்கு ஒரு நேரடி எச்சரிக்கையை விடுத்தார். ராஜீவ் காந்திக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரைக் குறிவைத்து விடுதலைப் புலிகள் அல்லது சீக்கிய அமைப்புகள் சதித் திட்டங்களைத் தீட்டியுள்ளதாகவும் இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய உளவு வட்டாரங்களில் இருந்து தனக்குத் தகவல் கிடைத்ததாக அரஃபாத் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கையை அவர் பாலஸ்தீன தூதர் வழியாக இந்திய அரசுக்கும், ராஜீவ் காந்திக்கும் தெரிவித்தார். ஆனால், இந்த அச்சுறுத்தல்களையும் மீறி ராஜீவ் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அரஃபாத் அளித்த இந்த எச்சரிக்கை, பின்னர் சி.பி.ஐ. மற்றும் ஜெயின் கமிஷன் விசாரணைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு எச்சரிக்கைவிடுக்கப்பட்ட பிறகும், ஏன் ராஜீவ் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை, முக்கிய தலைவர்கள் ஏன் அங்கு இல்லை என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக்கொண்டே உள்ளன. இவற்றை வெப் சீரிஸ் பதிவு செய்யாமல், ஸ்டீரியோ டைப்பில் போகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications