நீதிபதி மஞ்சுளா சொன்ன “அந்த” வார்த்தை.. உதயநிதிக்கு மட்டுமில்ல! அரசியல்வாதிகளுக்கே நெருக்கடிதான்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவில், நீதிபதி தெரிவித்த கருத்து, அனைத்து அரசியல்வாதிகளுக்குமே நெருக்கடியாக அமைந்து உள்ளது. அப்படி என்ன சொன்னார்? விரிவாக பார்ப்போம்.
பொதுவாக அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் குறித்து அறிக்கைகள், பேட்டிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் தேடிக்கொண்டு இருப்பதாக கூறினார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிக்க ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்துகொண்டிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்." என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டு இருந்தார்.
உதயநிதியின் இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு விதத்திலும் உதயநிதி ஸ்டாலின் பேசி இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மான நஷ்ட வழக்குகோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேச தடை விதிக்க வேண்டும் எனவும், நஷ்ட் ஈடாக ரூ.1.10 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. நீதிபதி மஞ்சுளா முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
5 ஆண்டுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு முறை கூட விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பவில்லை எனவும் அவரிடம் விசாரிக்கப்படவில்லை என்றும், அரசு இயந்திரம் அவர்கள் வசம் இருப்பதால் விசாரணை நடத்தி இருக்கலாம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.
தன் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை என்றும், 2018 ஆம் ஆண்டில் திமுக நிர்வாகி அளித்த ஊழல் புகாரில் ஆதாரங்கள் இல்லை என ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதை அரசும் ஏற்றுக்கொண்டதாகவும், இது தொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி தரப்பு வாதிட்டது.
தனது பெயருக்கு களங்கம் எற்படுத்தும் விதமாக பொய்யான குற்றச்சாட்டுக்களை எக்ஸ் சமூக வலை தளத்தில் தெரிவித்ததாகவும், 6.72 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர் எனவும், தேர்தல் நேரத்தில் அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, அரசியல் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உதயநிதியின் அறிக்கை அவதூறாக இருப்பதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
எனவே இதுபோல் அறிக்கைகள் வெளியிட கூடாது என்று உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க, ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உதயநிதிக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த கருத்துக்கள், அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள், பேட்டிகள், சமூக வலைதள பதிவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கும் வகையில் அமைந்து உள்ளது.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications