சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நூலகங்கள் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறப்பு.. தமிழக அரசு அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நூலகங்களைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 638 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களைத் திறப்பது குறித்து பொது நூலகங்கள் இயக்குநா் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார்கள்.

 The libraries in Tamil Nadu open from September 1

அதன்படி, கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் என அனைத்து நூலகங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது இந்த நூலகங்களில் புத்தகங்களைப் பெறுவது, குறிப்புகளை எடுப்பது, புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கிளை மற்றும் கிராமப்புற நூலகங்களில் புத்தகங்களைக் கையெழுத்திட்டு பெறும் பணியை மட்டும் மேற்கொள்ளலாம். அனைத்து நூலகங்களும் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்று கூறியுள்ளார்.

தென் சீன கடலில் பாதாள சுரங்கம்.. அம்பலமானது சீனாவின் பயங்கர ஆயுதங்கள், போர் விமானங்கள்தென் சீன கடலில் பாதாள சுரங்கம்.. அம்பலமானது சீனாவின் பயங்கர ஆயுதங்கள், போர் விமானங்கள்

Recommended Video

    Jayalalitha-வின் Veda Illam Library ரகசியம் | Oneindia Tamil

    இதனிடையே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நூலகத்திற்குள் வர அனுமதி இல்லை என்று நூலகத்துறை அறிவித்துள்ளது.

    English summary
    The Government of Tamil Nadu has ordered to open the libraries in Tamil Nadu from September 1. Meanwhile, the library department has announced that people over the age of 65 are not allowed inside the library.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X