விடாதீங்க! ஐஏஎஸ் வரை கனெக்சன்.. இந்த போட்டோவை பாருங்க.. நிகிதா பற்றி தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் அஜித் குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் நிகிதா என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் அவர் முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அஜித் குமார் விசாரிக்கப்பட்டார். அவர் கொடுத்த அழுத்தமே அஜித் குமாரை போலீசார் கொலை செய்யும் அளவிற்கு வழக்கை கொண்டு சென்றது என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் அதிக நகைகள் அணிந்து கையில் நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Sivagangai

அஜித்குமார் மரணம் - ஒரு கண்ணோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் மரண வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் டார்ச்சர் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது.

நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. "2010இல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும்" என்று கூறி நிகிதா மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

நிகிதா - ஐஏஎஸ் பின்னணி

தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. மதுராபுரம் கோவிலில் தனது அம்மாவிற்கு சக்கர நாற்காலி (வீல் சேர்) வேண்டும் என்று நிகிதா கேட்டதற்கு, காவலாளி அஜித் குமார் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.100 தருவேன் என்று நிகிதா கூறிய நிலையில் அது வாக்குவாதம் ஆகி, இதனால் கோபம் அடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் அளித்த புகாரின் பேரில், "இவரை விடாதீங்க.. கடுமையாக அடித்து உதைத்து விசாரிங்க" என்று சொல்லும் அளவிற்கு ஐஏஎஸ் மூலம் போலீசாருக்கு பிரஷர் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இந்த நிகிதா?

நிகிதா மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஜெயபெருமாள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். நிகிதா முனைவர் பட்டம் பெற்று திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஜெயபெருமாளின் குடும்ப உறுப்பினர் பலர் மீது இதேபோன்று மோசடி புகார்கள் உள்ளதாம்.

இவர் திருமங்கலம், கல்லிகுடி மற்றும் பல பகுதிகளில் உள்ள பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் வசூலித்து வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக 10.5.2011 அன்று திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயபெருமாள், தாய் சிவகாமி, சகோதரர் கவியரசு மற்றும் நிகிதா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கில் நிகிதாவின் தொடர்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+