வாடகை தாய்.. "அந்த" ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைத்தால் எல்லாம் ஓவர்.. சிக்கலில் நயன் - விக்னேஷ்
சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள நிலையில், இவர்கள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது சர்ச்சையாகி உள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில்தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
வாடகை தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது. ஒரு ஆண் - பெண் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு இருந்தால் மட்டுமே வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கும் நிறைய விதிகள் உள்ளன.

எப்படி பெற்றனர்
மொத்தம் இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார். இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டை சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இப்படித்தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது.

சட்டம்
இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் சொல்லும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று குழந்தை பெற்றால் பிரச்சனை இல்லை என்று கூறுகிறது. அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று தம்பதிகள் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் சட்டப்படி குழந்தைக்கு தாய், தகப்பனாக ஆக முடியும். அதன்பின் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பலாம். இப்போதும் கூட இந்தியாவில் இருந்து பலர் இப்படி வெளிநாடு செல்கிறார்கள்.

ரஷ்யா
முக்கியமாக இந்தியாவில் இருந்து பலர் ரஷ்யாவிற்கு சென்று இப்படி வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த குழந்தை தாய் விவகாரத்தில் முன்பு டீலர்களாக இருந்தவர்கள் கூட இப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிளைகளை தொடங்கி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் தம்பதிகளுக்கு வெளிநாடுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை அவர்கள் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

வாடகை தாய்
இந்த நிலையில்தான் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு குழந்தை பிறந்தது எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவிலேயே இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைபிறந்ததா அல்லது வெளிநாட்டில் பிறந்ததா என்று கேள்வி எழுந்துள்ளது. இவர்களுக்கு வெளிநாட்டில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்து இருந்தால் அது சட்டப்படி தவறாக இருக்காது. இதுதான் தற்போது இந்த விவகாரத்தில் எழுந்துள்ள பெரிய கேள்வி.

எங்கே?
இது தொடர்பாக சினிமா வட்டாரங்களில் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், இவர்கள் இருவருமே வெளிநாட்டில் உள்ளவர்கள் மூலம்தான் குழந்தை பெற்றனர். இந்த வருட தொடக்கத்திலேயே அதற்கான பணிகளை செய்துவிட்டனர். அதனால் இது சட்டப்படி குற்றம் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் எங்கே இந்த வாடகை தாய் முறையை பயன்படுத்தினார்கள் என்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications