'பாட்டம்-அப்'.. ஸ்டாலினின் ‘சைலண்ட்’ ஸ்கெட்ச்! அவசரப்பட்டாங்களே எதிர்க்கட்சிகள்! அடித்து ஆடிய திமுக
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 50-60 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக, பாஜக மற்றும் புதிதாக களமிறங்கியுள்ள கட்சிகள் என அனைத்தும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு எனத் தேர்தல் காலத்தின் கடைசி கட்டப் பணிகளை இப்போதே அவசர அவசரமாகத் தொடங்கிவிட்டன.
பொதுவாகத் தேர்தல் நெருங்கும் வேளையில் பேசப்படும் கூட்டணி விவகாரங்களை, எதிர்க்கட்சிகள் இப்போதே முன்னெடுத்து வருகின்றன. ஆனால், ஆளும் தரப்பான திமுக இது குறித்து அலட்டிக்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன்? அக்கட்சியின் மெதுவான நகர்வுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான அரசியல் கணக்குகள் குறித்து தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

விமர்சனங்களை முறியடித்த தொடக்கம்
கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில மாதங்களிலேயே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026-க்கான இலக்கை நிர்ணயித்துவிட்டார். "டிசம்பர் மாதத்திற்குள் 200 தொகுதிகளை வெல்வதற்கான பணிகளைத் தொடங்குங்கள்" என்று தொண்டர்களுக்கு அவர் இட்ட கட்டளை, அப்போது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. "தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும்போது இப்போதே எதற்குத் தேர்தல் காய்ச்சல்?" என்று கேட்டவர்களுக்கு, திமுக தனது உட்கட்சி அமைப்புகளைச் சீரமைப்பதன் மூலம் பதிலடி கொடுத்தது.
திமுக கூட்டணியில் ஆமை வேகம்: கட்டமைப்பில் கவனம்
மற்ற கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசத் தொடங்குவதற்கு முன்பே, திமுக தனது அடிமட்ட அமைப்புகளான கிளை, ஒன்றியம் மற்றும் மாவட்ட வாரியான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியது. மக்கள் நலத்திட்டங்கள் கடைகோடி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்ததோடு, "ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தின் மூலம் மாநிலம் தழுவிய ஒரு கலாச்சார பிணைப்பை அக்கட்சி முன்னெடுத்தது. எதிர்க்கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தியபோது, திமுக மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தியது. அதை தொடர்ந்து தமிழ்நாடு வெல்லும் தொடங்கி வரிசையாக பல கூட்டங்கள், நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
கடைசி நேர வியூகமும், கள எதார்த்தமும்
அரசியல் விமர்சகர்கள் கருத்துப்படி, மற்ற கட்சிகள் தேர்தலின் இறுதிக்கட்டப் பணிகளான கூட்டணி மற்றும் வாக்குறுதிகளை இப்போதே கையில் எடுத்துள்ளன. ஆனால், திமுகவோ முதலில் தொண்டர்களைத் தயார் செய்து, அவர்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் 'பாட்டம்-அப்' (Bottom-up) உத்தியைக் கையாண்டு வருகிறது.
முக்கியமாக மகளிர் மாநாடு, இளைஞரணி மாநாடு என்று வரிசையாக அடுத்தடுத்து மாநாடுகளை திமுக மேற்கொண்டு வருகிறது. இன்னும் நிறைய மாநாடுகள் இதேபோல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 8-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாடு, இந்த களப்பணிகளின் உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொண்டர் - மக்கள் பிணைப்பு:
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பதை விட, முன்கூட்டியே கட்டமைப்புகளைச் சீரமைத்து மக்களுடன் தொடர்பில் இருப்பதே வெற்றிக்கு வழி என்பது திமுகவின் கணக்கு. மற்ற கட்சிகள் கூட்டணிப் பலத்தை நம்பித் தேர்தலை அணுகும்போது, திமுக தனது தொண்டர் பலத்தையும், அரசின் சாதனைப் பட்டியலையும் மட்டுமே நம்பிக் களமிறங்குகிறது. இந்தத் தெளிவான திட்டமிடல், தேர்தல் பணிகளில் திமுகவை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது.
ஆனால் திமுகவை பார்த்து வேகமாக தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுக, பாஜக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகளை செய்ததே ஒழிய.. களத்தில் கூட்டங்களை நடத்தாமல் பின்தங்கி வருகிறது.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications