மிடில் கிளாசுக்கு ஹாப்பி.. வீட்டு லோன் கட்டுறீங்களா? வட்டி குறைய போகுது.. குறையும் ரெப்போ ரேட்
சென்னை: வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவிக்க உள்ளது. பலரும் எதிர்பார்த்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதை 6 சதவீதமாகக் குறைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மீண்டும் குறைப்பு
இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதை 6 சதவீதமாகக் குறைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும்.
ரெப்போ வட்டி விகிதம்
இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.
ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவிக்க உள்ளது. பலரும் எதிர்பார்த்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரெப்போ ரேட் விரைவில் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ரெப்போ வட்டி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உயர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியபோது, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனால் வட்டியும் இஎம்ஐ செலுத்தும் காலமும் உயர்ந்தது. ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது, உலகளவில் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் சமீபத்தில்தான் வட்டியை குறைத்தது. உலகளாவிய போக்கை ஆர்பிஐ பின்பற்ற வேண்டும். மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் 250 பிபிஎஸ் புள்ளிகளை ரெப்போ விகிதத்தில் ஆர்பிஐ உயர்த்தியது. கடைசியாக 2020 மே மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக 25 பிபிஎஸ் புள்ளிகளை ஆர்பிஐ ரெப்போ விகிதத்தில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உங்களின் இஎம்ஐ அல்லது இஎம்ஐ காலம் குறையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications