Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம், கடந்த ஜனவரி 9-ந்தேதி பொங்கல் பண்டிகை வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காத நிலையில் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்தது. தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு காரணமாக மறுதணிக்கை உடனே நடக்கவில்லை.. இததனிடைய ஜனநாயகன் படத்தை மறு தணிக்கை குழு இன்று பார்வையிடுகிறது. இதில் ஆட்சேபனை காட்சிகளை நீக்கி மறுதணிக்கை குழு உத்தரவிடும். அதன்படி ஒப்புக்கொண்டால் படத்தை வெளியிடலாம். ஆனால்அரசியல் பேசும் இப்படம் தேர்தல் நேரமான தற்போது திரைக்கு வருவது சந்தேகம் என்கிறார்கள்.

கே.வி.என். நிறுவனம் சுமார் 500 கோடி செலவில் ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.தணிக்கை சான்றிதழ் இல்லாத காரணத்தால் படம் வெளியாகவில்லை..

Vijay jana nayagan Delhi

ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா விசாரணைக்கு எடுத்தார்.

அப்போது ஜனநாயகன் திரைப்பட நிறுவனம் தரப்பில் மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், ''ஜனநாயகன் படம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், 22 நாடுகளில் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக தணிக்கை சான்றிதழ் கேட்டு கடந்த டிசம்பர் 18-ந்தேதி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பார்த்தார்கள்.

பின்னர், இந்த படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதற்காக சில காட்சிகளை நீக்கவேண்டும். சில வசனங்களை மவுனமாக்க வேண்டும் என்று மண்டல தணிக்கை வாரிய அலுவலர் கடந்த டிசம்பர் 22-ந்தேதி உத்தரவிட்டார்.

இதை ஏற்றுக்கொண்டு, அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. வசனங்களும் மவுனமாக்கப்பட்டன. இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டிய நிலையில், திடீரென அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் வந்துள்ளது. அதனால், இந்த திரைப்படத்தை தணிக்கை வாரியத்தில் உள்ள மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் தணிக்கை வாரிய தலைவர் தகவல் அனுப்பி இருக்கிறார்.

ஜனநாயகன் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அந்த படத்தை யாரும் பார்க்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது, அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் செய்ய வாய்ப்பே இல்லை. யார் அப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவே இல்லை..

அதுமட்டுமல்ல, யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரே, மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அதிகாரம் கிடையாது. எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்கள்.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "ரூ.500 கோடிக்கு எடுத்த படமாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்த படமாக இருந்தாலும், தணிக்கை வாரியத்துக்கு அனைத்து திரைப்படங்களும் ஒன்றுதான். மனுதாரர் 9-ந்தேதி திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்து விட்டார் என்பதற்காக அவருக்கு தணிக்கை சான்றிதழ் உடனே வழங்கி விடவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது.

மத உணர்வை புண்படுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தணிக்கை வாரியம் சட்டப்படிதான் செயல்படுகிறது " என்றார். இந்த வழக்கில் தனி நீதிபதி சான்றிதழ் தர உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சான்றிதழ் தர உத்தரவிடவில்லை. வேறுவழியின்றி வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம், சென்சார் குழுவின் மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தது. மறு தணிக்கை குழு, 'ஜனநாயகன்' படத்தை கடந்த 9-ந்தேதி பார்வையிடுவதாக இருந்தது. ஆனால், உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக படத்தை பார்க்க முடியாமல் போனதாக கூறப்பட்டது

இதற்கிடையில் மறு தணிக்கை குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) படத்தை பார்வையிட உள்ளனர். இன்றைய தினம் மறு தணிக்கை குழுவினர் பார்க்கும் பட்சத்தில் படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் அல்லது நீக்கப்பட வேண்டிய காட்சிகள் குறித்து குழுவினர் தெரிவிப்பார்கள். அதனைத்தொடர்ந்து படக்குழு எடுக்கும் முடிவைப் பொறுத்து படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்வார்கள்.

தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பேசும் இப்படம் திரைக்கு வருவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. எனினும் படத்தை விரைவில் ரிலீசுக்கு கொண்டுவர படக்குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டிருக்கும் நிலையில் 'ஜனநாயகன்' படத்தின் ஓ.டி.டி. உரிமம் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+