சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் வறுமை, போராட்டம்! சென்னை உணவு திருவிழாவில் பீப் விற்கும் "சுக்கு பாய்".. நெகிழ வைக்கும் வரலாறு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணி உள்ளிட்ட பீப் உணவுகள் போடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுக்குபாய் பிரியாணி கடை உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் 3 ஸ்டால்கள் இங்கு போடப்பட உள்ளன.

Recommended Video

    சென்னை உணவுத் திருவிழாவில் BEEF சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு

    சிங்கார சென்னையின் உணவு திருவிழா 2022 சென்னையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடக்க கூடிய உணவு திருவிழா ஆகும் இது. நேற்று நடைபெற்ற அரங்கில் பீப் பிரியாணி இந்த திருவிழாவில் இடம்பெறவில்லை.

    இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் அளித்த விளக்கத்தில் நாங்கள் பீப் பிரியாணியை தடை செய்யவில்லை. இங்கே நிறைய ஸ்டால்கள் உள்ளன. இதில் பீப் பிரியாணி வைக்க வேண்டும் என்று யாரும் விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று கூறினார்.

    சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி.. 3 கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி.. 3 கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி

    சென்னை உணவு திருவிழா

    சென்னை உணவு திருவிழா

    இதுவரை விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். மற்றபடி பீப் பிரியாணியை வேண்டும் என்றே தடை செய்யவில்லை என்று கூறினார். உணவுத்துறை அதிகாரிகளும் இதைத்தான் தெரிவித்தனர். இதையடுத்து கடும் விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் தற்போது பீப் பிரியாணியும் உணவு திருவிழாவில் இன்றும், நாளையும் இடம்பெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக மூன்று ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. இன்று முதல் அங்கு சுக்குபாய் நிறுவன பீப் உள்ளிட்ட பல்வேறு பீப் விற்பனை செய்யப்படும்.

    பீப் பிரியாணி

    பீப் பிரியாணி

    சென்னை உணவு திருவிழாவில் பீப் ஸ்டால் போட்டு இருக்கும் சுக்குபாய் நிறுவனம் நெகிழ்ச்சியான.. அதே சமயம் கலங்க வைக்கும் பின்னணியை கொண்டது ஆகும். சென்னையில் மிக பிரபலமாக இருக்கும் கடைதான் பீப் பிரியாணி. இவர்களின் பீப் பிரியாணி, பீப் வறுவல் மற்ற அசைவ உணவுகள் மிக மிக பிரபலம். அதேபோல் இவர்கள் கடையில் கிடைக்கும் பீப் கோலா உருண்டை, சூப் ஆகியவையும் மற்ற அசைவ சூப்களும் மிக பிரபலம் ஆகும்.

     சுக்குபாய் பிரியாணி

    சுக்குபாய் பிரியாணி

    இந்த சுக்குபாய் பிரியாணி கடை அப்துல் காதர் என்பவர் மூலம் தொடங்கப்பட்டது. சுமார் 45 வருடங்களுக்கு முன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். 1975ல் சென்னைக்கு வேலை தேடி வந்தவர்.. எப்படியாவது வறுமையில் உள்ள தனது குடும்பத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அவரின் குடும்பம் கடுமையான வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிறு சிறு வேலைகளை பார்த்தார்.

    அப்துல் காதர்

    அப்துல் காதர்

    அதன்பின் அப்துல் காதர் ஆலந்தூர் அருகே சிறிய கடை ஒன்றை குடும்பத்தோடு தொடங்கினார். மென்மையான பரோட்டா, பாயா, சூப்கள், சுக்கி காபி, கெபாப் போன்ற பொருட்களை விற்கும் சிறிய கடை ஒன்றை தொடங்கினார். இதன் சுவையை அறிந்து கொண்ட மக்கள் பலர் வரிசையாக அவரின் கடைக்கு வர தொடங்கினர். கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்த கடைதான் பின்னர் சுக்குபாய் பிரியாணி கடையாக மாறியது.

    வரலாறு

    வரலாறு

    இவர்களின் சுக்குபாய் பிரியாணி கடை முறையாக 1977லேயே தொடங்கப்பட்டுவிட்டது. முக்கியமாக இவர்களின் சுவையான சுக்குபாய் பிரியாணி ரெசிபியும் அதே 1977லேயே உருவாக்கப்பட்டுவிட்டது. நாட்கள் செல்ல செல்ல, கடைக்கு கூட்டம் பெருக பெருக சுக்குபாய் பிரியாணி கடையில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதேபோல் பல வகை பீப் உணவு பொருட்களும் விற்பனைக்கு வந்தன.

    English summary
    The spelndid story of Sukku Bhai Briyani shop who puts stall in Chennai Food Festival?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X