சமூக நோய்களை குணப்படுத்தும் காரமான திராவிட மாடல் அரசு... மு.க ஸ்டாலின் சுளீர்
திராவிட மாடல் அரசு என்று கூறும் மு.க ஸ்டாலின் இது சமூக நோய்களைக் களையும் காரமான அரசு என்று கூறினார்.
சென்னை: காரமான உணவு நோய்களில் இருந்து மக்களைக் காப்பது போல இந்த அரசும் சமூகத்தில் உள்ள நோய்களில் இருந்து மக்களைக் காக்கும் காரமான திராவிட மாடல் அரசு என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சட்டசபையில் பேசிய மு.க ஸ்டாலின் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அப்போது மகளிருக்கு இலவச பேருந்து பயணம் தொடங்கி இல்லம் தேடி கல்வித்திட்டம் வரைக்கும் மக்களைச் சென்றடைந்த திட்டங்களைக் கூறினார்.

சமூக நீதி காக்கும் சமத்துவபுரம் கண்ட அரசு என்று கூறிய அவர், நரிக்குறவர் சமூக பெண்களின் சமூக நீதி காத்த அரசு என்று கூறினார். ஆவடியில் நரிக்குறவ சமூக மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டதையும் சட்டசபையில் நினைவு கூர்த்தார்.
கடந்த மாதம் ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை சந்தித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். நரிக்குறவர் இன மக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களின் வீட்டில் இட்லி நாட்டுக்கோழி கறிக்குழம்பு சாப்பிட்டார். அந்த உணவு காரமாக இருந்தது.
இவ்வளவு காரமாகவா சாப்பிடுவீர்கள் என்று கேட்டதற்கு காரமாக சாப்பிட்டால்தான் எங்களுக்கு நோய்கள் தாக்காது என்றும் கொரோனா கூட தாக்கவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தார் ஸ்டாலின். அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும் காரமான உணவு நோய்களில் இருந்து மக்களைக் காப்பது போல இந்த அரசும் சமூகத்தில் உள்ள நோய்களில் இருந்து மக்களைக் காக்கும் காரமான திராவிட மாடல் அரசு என்று கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications