ஜெய்ஹிந்த்.. கொங்கு ஈஸ்வரனுக்கு கூட்டணி கட்சி காங்கிரஸ் கொடுத்த பதிலடி.. ட்விட்டரில் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்ஹிந்த் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சட்டசபையில் சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் எம்எல்ஏ கொங்கு ஈஸ்வரன், இந்த வருட ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறவில்லை என்றார்.

இது தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டதற்கான அறிகுறி என்று தெரிவித்திருந்தார்.

தலைநிமிர்ந்ததாக பேச்சு

தலைநிமிர்ந்ததாக பேச்சு

இதையடுத்து பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் ஈஸ்வரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜெய்ஹிந்த் என்பது தேசபற்று வார்த்தை. அது இல்லாமல் இருப்பது தமிழகம் தலைநிமிர்ந்து விட்டதற்கான அடையாளம் என்று சொன்னால் பிரிவினைவாதத்தை ஈஸ்வரன் ஆதரிக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்கள்.

ஈஸ்வரன் விளக்கம்

ஈஸ்வரன் விளக்கம்

இதற்கு பதிலளித்த ஈஸ்வரன், ஜெய்ஹிந்த் என்பதற்கு பதிலாக, வாழ்க பாரதம் என்று சொன்னால் தடை கிடையாது. ஜெய்ஹிந்த் என்பது இந்தி வார்த்தை என்பதால்தான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கருத்து

பாஜகவை போலவே காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இந்த விஷயத்தில் அதன் கருத்து என்ன என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பொதுக்கூட்டங்களில் அடிக்கடி பயன்படுத்தக் கூடியவர் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் என்ன கருத்துக் கூறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தேசிய கட்சி

தேசிய கட்சி

ஏனென்றால் கொங்கு மக்கள் தேசிய கட்சி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியாகும். அந்த கட்சியின் தலைவர் பேச்சுக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பதில் கிடைக்குமா அல்லது கூட்டணி தர்மத்துக்காக மவுனம் காக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்திரா காந்தி வீடியோ

இந்திரா காந்தி வீடியோ

இந்த நிலையில்தான் முன்னணி தலைவர்கள் யாரும் அதுபற்றி கருத்து தெரிவிக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திராகாந்தி பொதுக்கூட்டம் ஒன்றில், மூன்று முறை ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் என்று கூறக்கூடிய பேச்சு இடம்பெற்றுள்ள வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜெய்ஹிந்த் என்று சொல்வதில் பெருமை கொள்வோம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இரு பக்கமும் பேலன்ஸ்

இரு பக்கமும் பேலன்ஸ்

ஒரு பக்கம் தேசிய கட்சி என்பதால் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது பற்றி ட்விட்டர் வழியாக கருத்து தெரிவித்த காங்கிரஸ், கட்சியின் கூட்டணியில் உள்ள எம்எல்ஏ பேசிய பேச்சு என்பதால், முன்னணி தலைவர்கள் அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+