வேளச்சேரி பக்கம் போறீங்களா? அடியோடு மாறப்போகுது முக்கிய சாலை! நடக்கும் பெரிய மாற்றம்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த பெருங்குடி-வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை, அண்ணாநகர் போல மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

metro

புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்த திட்டத்தின் கீழ், சாலையின் இருபுறமும் உணவு கடைகள், பசுமையான இடங்கள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 24 மணி நேரமும் கடைகள் இயங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன் மூலம், இந்த சாலை இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சாலையை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலோசகர் அறிக்கை சமர்ப்பித்தவுடன், சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கும்" என்றார்.

தெற்கு ரயில்வேயிடம் இருந்து சாலைப் பராமரிப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த மாதம் கையகப்படுத்தியது. இந்த சாலையை முழு வீதியாக மாற்ற ஜி.சி.சி. சுமார் 15 கோடி ரூபாய் செலவிட உள்ளது.

போக்குவரத்து நெரிசல் குறையும்

தரமணி மற்றும் பெருங்குடிக்கான முக்கியமான இணைப்பாக இந்த 3 கி.மீ. தூர சாலை அமைந்துள்ளது. வேளச்சேரியில் இருந்து ஓ.எம்.ஆர். செல்லும் பயணிகளுக்கு இந்த சாலை போக்குவரத்து நேரத்தை குறைக்கும். மேலும், சி.எம்.ஆர்.எல். கட்டுமானத்தால் ஏற்படும் போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக தொந்தரவு இல்லாமல் பெருங்குடியை அடைய இது ஒரு குறுக்குவழியாகவும் இருக்கும்.

எம்.ஆர்.டி.எஸ். நிலையங்களுக்கும், வேளச்சேரி 100 அடி சாலைக்கும் இடையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பெங்களூரு சர்ச் ஸ்ட்ரீட் போல, இங்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சாலையின் பெரும்பகுதி பள்ளங்களாக உள்ளதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி, வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால், வேளச்சேரி - பெருங்குடி இடையே இருவழிப் போக்குவரத்திற்கு பதிலாக, ஒரு வழிப்பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

விரைவில் சீரமைக்கப்படும்

கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ள வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ஜனவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு கோடை காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை பொதுமக்களுக்கான ஹேங்கவுட் இடமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பணிகள் நடக்க உள்ளன" என்றனர்.

தற்போது, அந்த சாலையின் உரிமை ரயில்வேயிடம் உள்ளது. இருப்பினும், சென்னை மாநகராட்சி பராமரிப்பு பணிகளை மட்டும் மேற்கொண்டு, அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது.

மேலும், நிலப்பரப்பு ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடுத்த 15 நாட்களில் முடிவடையும். சேதமடைந்த மழைநீர் வடிகால்களும் மாநகராட்சி மூலம் புனரமைக்கப்படும். சிறந்த சாலை மேற்பரப்பு, நடைபாதை, இருக்கைகள், கூடுதல் தெரு விளக்குகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அமைக்கும்.

வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டு, மார்ச்-மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் இது பொதுமக்களுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தத்தில், பெருங்குடி-வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை சீரமைக்கப்பட்டால், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்கும் ஒரு நல்ல இடமாக மாறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+