சப்ஜெக்ட் தெரியாமல் பேசாதீங்க! உங்களுக்கு எல்லாம் தெரியுமா? நத்தம் விஸ்வநாதன் Vs சபாநாயகர் அப்பாவு!
சென்னை: தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வாதனுக்கும் சபாநாயகர் அப்பாவுவுக்கும் இடையே நிகழ்ந்த வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மின் துறை சார்ந்த திட்டம் குறித்து நத்தம் விஸ்வநாதன் பேச முயன்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட வேண்டாம் என நாகர்சாமி கூறியதோடு அப்படி ஒப்பந்தம் போட்டால் 20,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என அவர் எழுதி வைத்த விவரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறி சூடானார்.

சபாநாயகர் அப்பாவுவிடம் இருந்து இப்படி ஒரு பதிலடி வரும் என்பதை எதிர்பார்க்காத நத்தம் விஸ்வநாதன் ஒரு நொடி ஸ்தம்பித்து போனார். பிறகு தாம் கூறியதை சபை குறிப்பில் இருந்து நீக்குவதாகவும் இதை போல் தனக்கு 100 விஷயங்கள் தெரியும் எனவும் சபாநாயகர் அப்பாவு மீண்டும் சீறினார்.
இதனால் கோபம் அடைந்த நத்தம் விஸ்வநாதன், சபாநாயகருக்கு எல்ல சப்ஜெக்டும் தெரியுமா என்றும் எல்லா துறைகளின் விவரமும் தெரியும் என்றால் அமைச்சர்கள் எதற்கு இருக்கிறார்கள் என ஆவேசமானார்.
இதனால் மீண்டும் கடுப்பான சபாநாயகர் அப்பாவு தேவையில்லாததை பேச வேண்டாம் என்றும் சப்ஜெக்ட் தெரியவில்லை என்றால் யாரை பற்றியும் பேசக்கூடாது என்றும் மீண்டும் எச்சரித்தார்.

ஆனால் அசராமல் நத்தம் விஸ்வநாதன் ஏதோ எழுந்து நின்ற பேச, ஒரே வார்த்தையில் பேச்சை முடிங்க என கறார் காட்டினார் சபாநாயகர் அப்பாவு. இதனால் சட்டசபையில் சில நிமிடங்கள் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் சபாநாயகர் அப்பாவுவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்த நிலையில் நேற்று நத்தம் விஸ்வநாதனுக்கும் சபாநாயகருக்கும் வார்த்தைப் போர் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications